Actor vishnu vishal - jwala gutta Marriage : ஹைதராபாத்தில் எளிமையாக நடந்த விஷ்ணு விஷால் - ஜூவாலா கட்டா திருமணம்..

நடிகர் விஷ்ணு விஷாலுக்கும், பிரபல பேட்மிண்டன் வீராங்கனைக்கும் இன்று ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement

தமிழ்த் திரையுலகின் வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர், விஷ்ணு விஷால். முண்டாசுப்பட்டி, ராட்சசன் உள்பட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தற்போது எப்.ஐ.ஆர். உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ரஜினி நட்ராஜ் என்பவரை காதலித்து 2011-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில், இவருக்கும், ரஜினி நட்ராஜிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ஆம் ஆண்டு இருவரும் விவகாரத்து பெற்றனர்.

Continues below advertisement

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை விஷ்ணு விஷால் சில வருடங்களுக்கு முன்பு சந்தித்துள்ளார். முதலில் நண்பர்களாக பழகிய அவர்கள் பின்னர் காதலிக்கத் தொடங்கினர். இதையடுத்து, இருவருக்கும் கடந்தாண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக திருமணத் தேதி மட்டும் குறிப்பிடப்படாமல் இருந்தது.

கடந்த 13-ஆம் தேதி இருவரது திருமண பத்திரிகையை நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டார். இந்த நிலையில், விஷ்ணு விஷாலுக்கும் ஜூவாலா கட்டாவிற்கும் இடையே ஹைதராபாத்தில் இன்று எளிதாக திருமணம் நடைபெற்றது. பதிவுத் திருமணமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் இரு வீட்டார்களின் தரப்பில் இருந்தும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.  

திருமணத்தின்போது எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களை ஜூவாலா கட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னாள் பேட்மிண்டன் வீரர் சேத்தன் ஆனந்தை திருமணம் செய்து வாழ்ந்துவந்த ஜூவாலா கட்டா, கடந்த 2011-ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் அவர்களது ரசிகர்களும், திரைப்பிரபலங்களும், விளையாட்டு வீரர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

Continues below advertisement