நடிகர் விஷால் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறார். இதே நாளில் தான் சாய் தன்ஷிகாவுடன் தனது திருமணம் தேதியையும் அவர் தெரிவிக்க இருக்கிறார். இதனிடையில் கடுமையாக உடற்பயிற்சி செய்து தனது ஆரோக்கியத்தை மீட்டு வருகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
தனது ஆரம்ப கட்ட கரியரில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து கவனமீர்த்தவர் விஷால். செல்லமே, திமிரு , தாமிரபரணி, சண்டைக்கோழி , என இளம் தலைமுறையினர் குறிப்பாக பெண்களின் ஆதர்ஷ நாயகனாக உருவானார் விஷால். நடிப்பில் இருந்து நடிகர் சங்க நிர்வாகம் , தனிப்பட்ட சர்ச்சைகள் அவரது மார்கெட் மெல்ல குறையத் தொடங்கியது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் விஷாலுக்கு ப்ளாக்பஸ்டர் படமாக அமைந்தது. கடந்த ஆண்டு சுந்தர் இயக்கிய மதகஜராஜா படம் இந்த வெற்றியை தொடர்ந்தது.
கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் விஷாலின் உடல்நிலை குறித்த பல்வேறு கேள்விகள் இருந்து வந்தன. சினிமா நிகழ்ச்சிகளில் விஷால் மயங்கி விழுவதும் , பேசும்போது கை நடுங்குவதுமாக காணப்பட்டார். இதனை வைத்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளத்தில் பேசப்பட்டன. பாலாவின் அவன் இவன் படத்தில் விஷால் நடித்ததது முதல் அவருக்கு உடல் ரீதியான பிரச்சனை இருந்து வந்ததாக சிலர் கூறினர். தீவிர மதுப்பழக்கத்தால் விஷாலின் உடல் நிலை மோசமாகிவிட்டதாகவும் சில தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில் அவரது திருமணம் குறித்த நெருக்கடியை ஏற்படுத்தியது. இப்படியான நிலையில் தான் விஷால் சாய் தன்ஷிகா தங்கள் காதலை அறிவித்தனர்.
விஷால் 35
அடுத்தபடியாக விஷாலின் 35 ஆவது படம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது. ரவியரசு இப்படத்தை இயக்குகிறார். ஈட்டி , ஐயங்கரன் ஆகிய படங்களை இயக்கியவர் . சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் 99 ஆவது படம் இது. துஷாரா நாயகியாக நடிக்க , அஞ்சலி , தம்பி ராமையா , அர்ஜய் பிற கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த ஜூலை மாதம் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது ஊட்டியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டைட்டில் நாளை ஆகஸ்ட் ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது