நடிகர் விஷால் மற்றும் சாய் தன்ஷிகா திருமணம் செய்துகொள்ள இருப்பதை கடந்த ஜூலை மாதம் அறிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து இன்று விஷால் தனது 48 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் தினத்தில் சாய் தன்ஷிகாவுடன் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் விஷால் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் .

விஷால் சாய் தன்ஷிகா திருமண நிச்சயம் 

பிறந்தநாளில் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த விஷால் , சாய் தன்ஷிகாவுடன் தனது பெற்றோர்கள் மத்தியில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் முன்பு விஷால் சாய் தன்ஷிகா மோதிரம் மாற்றிக் கொண்டனர். கூடிய விரைவில் தனது திருமண தேதியையும் அறிவிக்க இருக்கிறார்கள்

2004 ஆம் ஆண்டு வெளியான செல்லமே படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் விஷால் . திமிரு , தாமிரபரணி , சண்டக்கோழி என ஆரம்ப கட்டத்தில் விஷால் நடித்த படங்கள் சூப்பர் ஹிட் வெற்றிப்படங்களாக அமைந்தன. ரொமான்ஸ் ஆக்‌ஷன் என கலக்கி வந்த விஷால் தென் இந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு செயலாளர் பதவியேற்றார். மேலும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்கிற சொந்த தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். 

அண்மை காலங்களில் விஷால் கடும் உடல் ரீதியான பிரச்சனைகளை சந்தித்து வந்தார். வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவர் கை நடுக்கத்துடன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டது அவரது உடன் ஆரோக்கியம் குறித்த கேள்வி எழுந்தது. மதுப்பழக்கத்திற்கு அடிமையானதே விஷாலின் உடல் நிலை மோசமானதற்கு காரணம் என கூறப்பட்டது. ஆனால் தன் மீதான விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலளித்து அடுத்து படங்கள் , திருமணம் , உடல் ஆரோக்கியம் என நகர்ந்து வருகிறார் விஷால். 

காதல் கிசுகிசுக்கள் 

விஷாலுடன் பாண்டிய நாடு , நான் சிகப்பு மனிதந் ஆகிய படங்களில் நடித்த லக்‌ஷ்மி மேனனும் காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் அப்போது தகவல்கள் வெளியாகின. பின் விஷால் வரலட்சுமி சரத்குமார் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுகுறித்து விஷால் அதிகாரப்பூர்வமாக பேசியதோ விளக்கமளித்ததோ இல்லை.