நடிகர் விஷால் மற்றும் சாய் தன்ஷிகாவுக்கு கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நடிகர் சங்க கட்டிட பணிகளுக்குப் பின் இருவருக்கும் திருமண தேதி உறுதி செய்யப்பட இருக்கிறது. இப்படியான நிலையில் பேட்டி ஒன்றில் தனது பழைய காதலைப் பற்றி நடிகர் விஷால் பகிர்ந்துகொண்டுள்ளார்.
செல்லமே படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஷால். திமிரு , தாமிரபரணி, சண்டைக்கோழி அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி மார்கெட்டை உருவாக்கினார். ரஜினிகாந்த் , விஜயகாந்த் போன்ற நடிகர்களைத் தொடர்ந்து பெண்களால் அதிகம் நேசிக்கப்படக் கூடிய நாயகராக விஷால் இருந்தார். நயன்தாரா , லக்ஷ்மி மேனன் ஆகிய நடிகைகளை விஷால் டேட் செய்ததாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது ஒருவழியாக கிசுகிசு பேச்சுக்கள் ஓய்ந்து திருமண வாழ்க்கையில் செட்டிலாக இருக்கிறார். அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் விஷால் தனக்கு ஏற்பட்ட காதல் அனுபவங்கள் பற்றி வெளிப்படையாக பகிர்ந்துகொண்டார்.
ப்ரோபோஸ் செய்து முத்தம் கொடுத்த பெண்
" எனக்கு நிறைய லவ் ப்ரோபோஸல் வந்திருக்கின்றன. சிவப்பதிகாரம் படத்தின் போது ஒரு பெண் எனக்கு ப்ரோபோஸ் செய்து எனக்கு முத்தமும் கொடுத்தார். அப்படி செய்யவேண்டாம் என்று நான் அவரிடம் சொன்னேன். என்னுடைய புகழை வைத்து எப்போது நான் பெண்களிடம் தவறாக நடந்துகொண்டது கிடையாது. பெண்ணாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். பாலா படத்தில் நடித்துவிட்டேன் . எனக்கு ஒரு நீண்ட நாள் ஆசை இருந்தது . ஒரு ஸ்பேனிஷ் பெண்ணை டேட் செய்ய வேண்டும் என்று. அதுவும் இப்போது நிறைவேறிவிட்டது. ஒரு படத்தையாவது இயக்கவேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. என்னைப் பற்றிய எல்லா வதந்திகளுக்கும் நான் உடனே விளக்கமளித்துவிடுவேன். நான் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதை எல்லாரும் கேலி செய்தார்கள். இப்போது அதையும் விட்டுவிட்டேன். என் ஃபோனில் நான் கார்த்திக்கு மட்டும் தான் அழைப்பேன். ஒரு நாளைக்கு ஆறு நாட்களுக்கு கார்த்திக்கு போன் செய்வேன். " என விஷால் கூறியுள்ளார்
மகுடம்
விஷால் தற்போது மகுடன் திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். ஆ.பி.செளத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. துஷாரா விஜயன் படத்தில் நாயகியாக நடிக்கிறார்.இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.