கல்வியும் மாணவர்களின் ஒழுக்கமும்

கல்வி தான் மாணவர்களை ஒழுங்கம் உடையவர்களாக மாற்றும் ஆயுதமாக உள்ளது. எனவே பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து தான் சிறந்த மாணவன் உருவாகுவான். எனவே மாணவர்களை ஒழுக்கமுடையவராக மாற்றுவது ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. அந்த வகையில் நல்ல பழக்கங்களை பள்ளிகளில் இருந்து கற்பிக்க தொடங்க வேண்டும். இதன் படி பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத நிலையை உருவாக்க அரசு திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் பிளாஸ்டிக் இல்லாத சூழலை உருவாக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பரிசை அரசானது அள்ளிக்கொடுக்கிறது.  

Continues below advertisement

பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத தமிழகம்

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மீண்டும் மஞ்சப்பை" பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி. ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் (SUP) கை பைகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து, மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை மீண்டும் உயிர்ப்பித்து, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு இது வழங்கப்படும். 

முதல் பரிசாக ரூ. 10 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 5 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சம் பரிசு வழங்கப்படும். இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் (TNPCB), ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாகப் சுற்றுச் சுழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும், தங்கள் வளாகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மூலம் தடையை அமல்படுத்துவதற்கும், 

Continues below advertisement

 

பரிசை அள்ளிக்கொடுக்கும் அரசு- விண்ணப்பிக்க அழைப்பு

வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றுவதற்கும் முன்மாதிரியானபங்களிப்பைச் செய்த பள்ளிகள் / கல்லூரிகள் / வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்க முன்மொழிகிறது. விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்திலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்திலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களின் அனைத்து இணைப்புகளிலும் தனிநபர் /அமைப்புத் தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும். விண்ணப்பங்களின் மென் நகலுடன், இரண்டு அச்சுப் பிரதிகள் (கடின நகல்) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.01.2026 ஆகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.