விஷால் நடித்து அவருடைய Vishal Film Factory நிறுவனம் தயாரிப்பில் வெளியான திரைப்படம் தான் இரும்புத்திரை. பிரபல நடிகர் அர்ஜுன் வில்லனாக நடித்து 2018ம் ஆண்டு வெளியான இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்திற்காக பிரபல சினிமா பைனான்சியர் சௌத்ரியிடம் பணம் பெற்றதாகவும் ஆனால் அந்த பணத்தை வட்டியுடன் தற்போது முழுமையாக திருப்பி அளித்துவிட்டதாகவும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடனை முழுமையாக திருப்பி கொடுத்துள்ள நிலையில், கடன் வாங்கியதற்காக சௌத்ரியிடம் வழங்கிய காசோலை, பத்திரம் மற்றும் இதர ஆவணங்களை அவரிடம் கேட்டபோது முறையான பதில் இல்லை என்றும். தற்போது அந்த ஆவணங்கள் தொலைத்துவிட்டதாக அவர் கூறிவருவதாகவும் நடிகர் விஷால் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தனது தரப்பில் இருந்து தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மீது போலீசில் புகார் அளித்துள்ளதாக விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். பிரபல சினிமா தயாரிப்பாளர் ஒருவர் மீது பிரபல நடிகர் ஒருவர் இப்படி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நடிகர் ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோரின் தந்தை தான் ஆர்.பி.சௌத்ரி என்பதும் பலரும் அறிந்த விஷயமே. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் அவர் பல படங்களை தயாரித்துள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த சௌத்ரி சினிமா துறையில் கால்பதிப்பதற்கு முன்பு நகை வியாபாரம் மற்றும் ஸ்டீல் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 1990ம் ஆண்டு மறைந்த நடிகர் முரளி நடிப்பில் வெளியாகி பெரிய அளவில் ஹிட்டான புது வசந்தம் திரைப்படம் தான் சௌத்ரி முதன்முதலில் தமிழில் தயாரித்து வெளியிட்ட திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜயன் பூவே உனக்காக லவ் டுடே போன்ற பல படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார் சௌத்ரி.
Maanadu First Single | ‛மாஷாஅல்லாஹ்...’ ட்விட்டரில் ட்ரெண்டிங் அடிக்கும் மாநாடு!
இறுதியாக தமிழில் ஜீவா மற்றும் அருள்நிதி நடிப்பில் வெளியான களத்தில் சந்திப்போம் என்ற படத்தையும் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்து வழங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் சில தெலுங்கு படங்களை அவர் தற்போது தயாரித்து வருகின்றார். பிரபல தயாரிப்பாளர் ஒருவர் மீது பணமோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது திரையுலகை பரபரப்பாகியுள்ளது. நடிகர் விஷால் 2013ம் ஆண்டு வெளியான தனது பாண்டிய நாடு என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். இதுவரை 9 படங்களை தயாரித்துள்ள அவர் இறுதியாக தனது சக்ரா படத்தை தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.