அத்தியாவசிய பொருட்கள் மீது ஜிஎஸ்டி விதித்துள்ள மத்திய அரசை விமர்சிக்கும் விதமாக பிரபல நடிகை வினோதினி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


சமீபத்தில் நடந்த 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில்  25வது கிலோ மற்றும் அதற்கு குறைவான எடையில் பேக்கிங் செய்யப்படும் அரிசி, பருப்பு, தயிர்  உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பு ஜூலை 18 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்ட பொதுமக்கள், வியாபாரிகள் கடும் அதிருப்தியடைந்தனர். 


இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பிய பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார். 25 கிலோவில் அரிசி பேக் செய்த வியாபாரிகள் அதனை மாற்றி 26 கிலோவாக விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். இதனிடையே தமிழ் சினிமாவில் காமெடி, குணச்சித்திரம் கலந்த வேடங்களில் நடித்து வரும் வினோதினி ஜிஎஸ்டி வரி விதிப்பை எதிர்த்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 






அதில் சாப்பிட்டீங்களா...வாங்க பில்ல போடுவோம்...என்ன சாப்பிட்டீங்க..ரசம், சாதமா..ரசத்துக்கு ஜிஎஸ்டி, சாதத்துக்கு ஜிஎஸ்டி , ரசத்துல ஊத்துன நெய்க்கு ஜிஎஸ்டி, நெய்யில கலந்த டால்டாவுக்கு ஜிஎஸ்டி, அதில் போடப்பட்ட தாளிச்ச கடுகுக்கு ஜிஎஸ்டி, எண்ணெய்க்கு ஜிஎஸ்டி, எண்ணெய் ஊத்தின பாத்திரத்துக்கு ஜிஎஸ்டி, அது வைக்கப்பட்டுள்ள ஸ்டவ், சிலிண்டருக்கு ஜிஎஸ்டி எழுதிக்கோ..


சார் அந்த விரலை காட்டுங்க...10 விரல் இருக்கா... 10க்கும் ஜிஎஸ்டி  போடு...உங்க விரலா? யூஸ் பண்ணிங்க தானே. ஏது சாப்பிட வலது கை மட்டும்தான் யூஸ் பண்ணீங்களா? ஏன் அந்த இலைய சரி பண்ண இடது கை யூஸ் பண்ணீங்க...ஏமாத்த  பாக்குறீங்களா?..அப்புறம் மறக்காம அந்த மூக்கு ஜிஎஸ்டி போடுங்க..மொத்தம் ரூ.10,375 ஆச்சு... நீங்க 11 ஆயிரம் கொடுங்க..அது அவங்க போட்ட ஜிஎஸ்டி..இது நாங்க போடுற ஜிஎஸ்டி..எது உங்ககிட்ட பணம் இல்லையா? போங்க சார்.. போய் கோடீஸ்வரனாகிட்டு வாங்க. அப்பதான் வாழ முடியும். கோடீஸ்வரனா பொறக்காதது உங்க தப்பு சார். எது வேலை பண்ணி கோடீஸ்வரனாக போறீங்களா...அப்பாவி என அந்த வீடியோவில் வினோதினி கூறுகிறார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண