Dhruva Natchathiram: ’நீ கெத்தா..கொஞ்சம் பார்த்தா’ .. மாஸாக வெளியான துருவ நட்சத்திரம் படத்தின் 2ஆம் பாடல்..!

நடிகர் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து His Name Is John என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

Continues below advertisement

நடிகர் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து His Name Is John என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

Continues below advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக உள்ள கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில்  விக்ரம் நடித்துள்ள படம் “துருவ நட்சத்திரம்” . இந்த படம்  கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த கதை முதலில் நடிகர் சூர்யாவுக்கு எழுதப்பட்டது. ஆனால் அவர் படத்தில் நடிக்க மறுக்கவே அந்த கதையில் சில மாற்றம் செய்யப்பட்டு விக்ரம் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

விறுவிறுப்பாக படம் தொடங்கிய நிலையில், துருவ நட்சத்திரம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா, ப்ரித்விராஜ் சுகுமாறன், பார்த்திபன், சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் கடந்த 2018 ஆம்  ஆண்டு வெளியாகி ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. ஹாலிவுட் தரத்திலான மேக்கிங் ஸ்டைல் வரவேற்பை பெற்றது.

இதேபோல் “ஒரு மனம்” பாடலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது. ஆனால் அதன்பிறகு 5 ஆண்டுகளாக எந்தவித அப்டேட்டும் படக்குழு சார்பில் வெளியாவில்லை. ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கிய ஒரு சில படங்கள் பொருளாதார பிரச்சினையால் தாமதாமாக வெளியாகி இருந்தது. இதனால் துருவ நட்சத்திரம் படமும் அப்படித்தான் போல என ரசிகர்கள்  நினைத்தனர். 

தூசு தட்டப்பட்ட துருவ நட்சத்திரம் 

இந்த நிலையில் தான் சில மாதங்களுக்கு முன் துருவ நட்சத்திரம் படம் முடிவடைய உள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தொடங்கும் எனவும் இயக்குநர் கௌதம் மேனன் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர்  ஹாரிஸ் ஜெயராஜ்  துருவ நட்சத்திரம் படத்தின் பின்னணி இசை தொடங்கியதாக தெரிவித்தார். அடுத்தடுத்து வெளியான அப்டேட்டுகளால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.  

இந்நிலையில் துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து His Name Is John என்ற பாடல் வெளியாகியுள்ளது. பால் தாபா எழுதி, பாடியுள்ள இந்த பாடல் வரிகள் விக்ரமின் கேரக்டரை பிரதிபலிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola