வீர தீர சூரன் டீசர்


தங்கலான் படத்திற்கு பின் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் வீர தீர சூரன். கடந்த ஆண்டு சித்தா படத்தின் மூலம் ஹிட் கொடுத்த அருண்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். துஷாரா விஜயன் , எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிராமத்து கதைக்களத்தை பின்புலமாக கொண்டு உருவாகியுள்ள வீரதீர சூரன் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது


சுமாரோ சூப்பரோ எந்த படம் என்றாலும் தன்னுடைய 100 சதவீத உழைப்பை கொடுத்து நடிப்பவர் சியான் விக்ரம். தூல் , அருழ் , சாமி என அடுத்தடுத்து கமர்ஷியல் வெற்றிகளைக் கொடுத்தாலும் இன்னொரு பக்கம் காசி , பிதாமகன் , என மாறுபட்ட கதைக்களங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான தங்கலான் வரை தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி வழியை பின்பற்றி வருகிறார். 


 


வீர தீர சூரன் படத்தின் மூலம் நீண்ட காலத்திற்கு பின் கிராமிய கதைக்களத்திற்கு திரும்பியுள்ளார் விக்ரம்.


சித்தா திரைப்படத்தின் வெற்றிக்குப்பின் இயக்குநர் அருண்குமார் மீது பெரியளவில் ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் மற்றும் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.


 


ஒருபக்கம் விக்ரமின் லுக் , சண்டைக்காட்சிகள் நம்மை கவர்ந்தாலும் இன்னொரு பக்கம் வில்லனாக எஸ்.ஜே சூர்யா சம்பவம் செய்வார் என்கிற நம்பிக்கையை இந்த டீசர் அளித்துள்ளது


தங்கலான் படத்தைத் தொடர்ந்து இப்படத்திற்கும் ஜி.வி இசையமைத்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்து சமீபத்தில் வெளியான அமரன் , லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் பெரியளவில் வெற்றிபெற்றன. மேலும் தங்கலான் படத்தின் பின்னணி இசை ரசிகர்களால் பாராட்டப்பட்டது.  இப்படத்தின் வெற்றிக்கு ஜி.வியின் மிக முக்கியமானதாக இருக்கும் என்பதில் சந்தேகவியின் 


 








மேலும் படிக்க : Jailer 2 : ஜெயிலர் 2 படத்திற்கு நெல்சன் சொன்ன கண்டிஷன்..பதறிய சன் பிக்ச்சர்ஸ்