ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுக்க 5,500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. கல்கியின் ஆகச்சிறந்த படைப்பான ‘ பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப்படம் நாவலை படித்தவர்கள் மத்தியிலும் சரி, படிக்காதவர்கள் மத்தியிலும் சரி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கும் இந்த படத்தில் பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும் , மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் அவரது தந்தையும் சீனியர் நடிகருமான பிரபுவும் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி பகிர்ந்த நடிகர் விக்ரம் பிரபு , ஆதித்ய கரிகாலனாக நடித்த விக்ரமின் நடிப்பையும் ஈடுபாட்டையும் கண்டு தான் வியந்ததாக தெரிவித்திருக்கிறார்.





”100 பேர் சுற்றி நிற்கும் இடத்தில் நடிகர் விக்ரம் , அத்தனை அர்பணிப்பு உணர்வுடன் அந்த கதாபாத்திரத்தை செய்திருந்தார். ஷூட்டிங் ஸ்பாட்டிலும் கூட ஏதாவது முனுமுனுத்துக்கொண்டே இருப்பார். ஷூட்டிங் ஸ்பாட் அனைத்துமே , ஏதோ பரிட்சைக்காக காத்திருக்கும் மாணவர்கள் போல இருப்பார்கள் நடிகர் . மணி சார் படம் என்றாலே சாப்பிடக்கூட நேரம் இருக்காது என என் அப்பா முன்னதாகவே என்னிடம் தெரிவித்திருந்தார். கிடைக்கும் நேரங்களில் சாப்பிட்டுவிடு என்பதுதான் என் அப்பா சொன்ன அட்வைஸ் . காலை 6 மணிக்கு துவங்கு ஷூட்டிங்கில் 10.30 மணி வரையில் உங்களுக்கு பிரேக்கே இருக்காது ! சாப்பிடவே முடியாது! ”என்றார் விக்ரம் பிரபு 


 






இதனிடையே, அண்மையில் இந்தப்படத்தின் வசூல் தொடர்பான விவரங்களை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம், முதல் நாளில் உலகம் முழுவதும் 80 கோடி ரூபாயையும், இரண்டாவது நாளில் 150 கோடி ரூபாயையும், மூன்றாவது நாளில் 200 கோடி ரூபாயையும் வசூல் செய்தது என அறிவித்தது.