தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும், அதற்கு தேவையான அனைத்தையும் செய்யும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் விக்ரம். இயக்குநர் பாலா இயக்கி இவர் நடித்த சேது படத்திற்காக தனது உடலை வருத்தி மனநோயாளியாகவே மாறிய விக்ரம் இன்றும் அதே மாதிரியான உழைப்பை தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் கொடுத்து வருகிறார். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், கதாபாத்திரத்திற்காக உடலை எடை கூட்டுவதையும், குறைப்பதையும் மிக சகஜமாக செய்வது இவரது ஸ்டைலாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விக்ரமின் பர்சனல் உடற்பயிற்சியாளர் பரத்ராஜ், அவரது டயட் சார்ந்த சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். இவர் ஐ படத்தில் விக்ரமின் உடலை ஒல்லியாகவும் பின்னர் நார்மலாகவும் மாற்றியவர். தொடர்ந்து விக்ரமின் பர்சனல் ட்ரெய்னராக பணியாற்றி வரும் இவர் அதில் குறிப்பிட்டதாவது, “ ஐ படத்தின் போது விக்ரம் நார்ச்சத்து மிக்க உணவுகளை சாப்பிட்டார். அவர் அதிகளவிலான பழங்கள் சார்ந்த டயட்டை பின்பற்றினார். இவருக்காக பல நாடுகளில் இருந்து, பழவகைகளை நாங்கள் இறக்குமதி செய்தோம். ஒரு படத்திற்காக 4 வருட காலமாக வொர்க்அவுட் செய்த விக்ரம் பகிர்ந்து கொண்டது பின்வருமாறு:-
இது குறித்து விக்ரம் கூறும் போது “முதலில் நான் என்னை ஸ்டாராங்காக மாற்ற நல்ல தசைகளை கொண்ட உடலாக எனது உடலை மாற்றினேன். அதன்பின்னர் மாடல் போல மாறுவதற்கு தேவையான உடற்பயிற்சிகளை செய்தேன். அதன்பின்னர் என்னால் என்னை சுறுசுறுப்பாக உள்ளவனாக உணர்ந்தேன்.” என்று கூறினார்.
இருமுகன் படத்தின் போது, வெயிட் லிஃப்ட்டிங் சார்ந்த உடற்பயிற்சிகளை விக்ரம் அதிக அளவில் செய்ய வில்லை. அவருக்கு பிடித்த உணவுகளை தவிர்த்திருந்தார். எப்போதுமே அவர் இளையதலைமுறை ஆரோக்கிய உணவுகளுடன் கூடிய உடற்பயிற்சியை செய்வதை ஊக்குவித்துக்கொண்டே இருக்கிறார்.