பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கிவிட்டது. அதிலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த பொங்கல் மிகவும் ஸ்பெஷல் பொங்கலாக அமைய முக்கிய காரணம் இந்த தலைமுறையின் சூப்பர் ஸ்டார்கள் என கொண்டாடப்படும் விஜய்- அஜித் படங்கள் 8 ஆண்டுகளுக்குப் பின் நேரடியாக மோதுவது தான். 


 



விஜய்யின் 'வாரிசு' மற்றும் அஜித்தின் 'துணிவு' திரைப்படங்கள் இரண்டுமே முன்னம் பின்னுமாக வெளியாகும் என தகவல்கள் முன்னர் வெளியானது. ஆனால் நேற்றைய அறிவிப்பின் படி துணிவு திரைப்படத்தை விடாமல் துரத்தி வரும் வாரிசு திரைப்படம் என இரண்டுமே ஜனவரி 11 ஒரே நாளில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். 


 






 


ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள வாரிசு படத்திற்கு யுனைடெட் கிங்டம் நாடுகளில் அமோகமான வரவேற்பு கிடைத்துள்ளது. யுனைடெட் கிங்டமில் வாரிசு திரைப்படத்தை வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ள அஹிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அங்கு வாரிசு படத்தின் முன்பதிவு டிக்கெட்கள் பெரும் அளவில் விற்று தீர்ந்து சாதனை படைத்துள்ளது என்ற அறிவிப்பினை ஏற்கனவே ட்விட்டர் மூலம் வெளியிட்டு இருந்தது.


அந்த வகையில் தற்போதைய ரிலீஸ் தேதி மாற்றத்தால் UKவிலும் வாரிசு திரைப்படம் ஜனவரி 11ம் தேதி வெளியாகவுள்ளது. சில தவிர்க்க முடியாத காரணங்கள் இந்த தேதி மாற்றம் நடைபெற்றுள்ளது. இதனால் ஜனவரி 11ம் தேதி சில கூடுதலான காட்சிகளை சேர்க்க முடிவெடுத்துள்ளனர்.


 






ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்தவர்களின் நம்பிக்கையை இழக்க கூடாது என்ற நோக்கத்தில் ஜனவரி 10ம் தேதி மாலை நடக்க வேண்டிய பிரீமியர் ஷோக்களை கூட ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். இந்த முடிவை நாங்கள் மிகவும் கனத்த மனதோடு தான் எடுத்துள்ளோம். இருப்பினும் ஜனவரி 11ம் தேதியன்று உங்கள் அனைவரின் ஒத்துழைப்போடும் 'வாரிசு' திரைப்படத்தை திரையில் கொண்டாடுவோம் என்ற அறிவிப்பு ஒன்றினை ட்விட்டர் மூலம் வெளியிட்டுள்ளது அஹிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம். யுனைடெட் கிங்டம் என்பது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.