நடிகர் விஜய் தற்போது இயக்குநர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும்  ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். ஜார்ஜியா, டெல்லி, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நடத்திய படக்குழு அண்மையில் தங்களது 100 வது நாள் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளது. அது தொடர்பான புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலானது. 






 


இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்  தமிழில்  ‘ தோழா’ படத்தை இயக்கிய இயக்குநர் வம்சி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் விஜயின் 68 வது படத்தை இயக்குநர் அட்லீ இயக்கப்போவதாகவும், 2023 இல் எடுக்கப்பட இருப்பதாகக் கூறப்படும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர் டெய்ன்மெண்ட் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.  முன்னதாக விஜயின்  ‘தெறி’ ‘ மெர்சல்’  ‘ பிகில்’ உள்ளிட்டப் படங்களை இயக்கியிருந்தார் அட்லீ. வெற்றிக்கூட்டணியாகப் பார்க்கப்படும் இந்தக் கூட்டணி மீண்டும் இணைவதை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறோம் என அவரது ரசிகர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அட்லீ தற்போது ஷாருக்கானின் லயன் படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. 






 


இதனிடையே, விஜயின் 67 வது படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக நேர்காணல் ஒன்றில் விஜய்க்கு கதை சொல்லியிருக்கிறேன் என்றும் என்னுடைய தற்போதைய கமிட் மெண்டுகளை முடித்து விட்டு விஜய்க்காக காத்திருக்க போகிறேன் என்று கூறியிருந்தார். ஏ.ஆர். முருகதாஸூம் விஜய்க்கு கதை சொல்லி இருப்பதாகக் கூறப்படும் நிலையில், விஜய் யாரை தேர்ந்தெடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண