நடிகர் விஜய் பீஸ்ட் படத்திற்குப் பிறகு  இயக்குனர் வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அப்படத்தின் ஷூட்டிங் வேகமாக போய்க்கொண்டிருக்கிறது. முன்னதாக நடிகர் விஜய் ரா ஏஜெண்டாக நடித்த பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. திரைக்கதையில் பல சொதப்பல் இருந்ததால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போனது பீஸ்ட். இந்த நிலையில் வம்சி இயக்கத்தின் உருவாகி வரும் வாரிசு திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து படங்கள் என நடிகர் விஜய் படு பிஸியாக இருந்தாலும் பிஸினஸ் என்பதிலும் ஆர்வமாக இருப்பவர். குறிப்பாக விஜயின் மனைவி பிஸினஸ் விஷயங்களை கவனித்து வருகிறார். 

Continues below advertisement






நடிகர் விஜய்க்கு சொந்தமான பல திருமண மண்டபங்கள், கடைகள் சென்னை சாலிகிராமத்திலும், சென்னையின் பல்வேறு இடங்களிலும் இருக்கிறது. சாலிகிராமம், வடபழனி, போரூர், புதுக்கோட்டை என விஜய் சொந்தமான பல திருமண மண்டபங்களை நடத்தி வருகிறாராம். மேலும் குறிப்பிட்ட மண்டபத்தை தயாரிப்பாளர் ஒருவருக்கு மாத வாடைக்கு கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில்தான் விஜயின் மண்டபங்கள் ரிலையன்ஸுடன் கைகோக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. விஜயின் மண்டபங்களை ரிலையன்ஸ் சூப்பர் மார்கெட் வைக்க வாடடைக்கு கொடுக்கப்போவதாகவும், அதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் விஜயின் மண்டபங்கள் இனி சூப்பர் மார்கெட்டுகளாக மாறலாம் என சொல்லப்படுகிறது.


இதற்கிடையே வாரிசு படத்தில் படுபிஸியாக இருக்கிறார் விஜய்.  வாரிசு படத்தில் விஜய் ஆப் டிசைனராக நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியானது. இப்படத்தின் இரண்டுகட்ட படப்பிடிப்புகள் முன்னதாக சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளன.
இந்தப் படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஷாம், ராதிகா, குஷ்பூ உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. தமன் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டு பொங்க ரிலீஸாக இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.