கமல்ஹாசனின் 'விக்ரம்' மற்றும் மாதவனின் 'ராக்கெட்ரி' ஆகிய படங்களில் கேமியோ ரோலில் நடித்ததற்காக சூர்யா ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய வைரலானது.  அதேபோல் தற்போது நடிகர் விஜய் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் ஒரு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 


அட்லீ தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் நயன்தாராவை வைத்து 'ஜவான்' படத்தை இயக்கி வருவது நாம் அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் இந்த படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. 






மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் செய்திகள் வெளிவருகிறது. அதேபோல், நடிகர் விஜய் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் வதந்திகள் பரவியது. இந்த சூழலில் அதை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு செய்தி ஒன்று கிடைத்துள்ளது. 


கிடைத்த தகவலின்படி, 'ஜவான்' படத்தில் கேமியோ ரோலில் நடிக்க நடிகர் விஜய் தனது கால் சீட்டில் இருந்து ஒரு நாள் ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது. வருகிற செப்டம்பர் மாதத்தில் 25 நாட்கள் சென்னையில் படப்பிடிப்பை நடத்த ஜவான் படக்குழு திட்டமிட்டுள்ளது. அந்த 25 நாட்கள் நடத்தப்படும் சூட்டிங்கில் நடிகர் விஜய் தனது போர்சனை முடித்து கொடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகர் விஜய் அட்லீ மற்றும் ஷாருக்கானுடன் நல்ல நட்பை கொண்டிருப்பதால் சம்பளம் எதுவும் பேசி கொள்ளாமல் நடிக்க ஒப்புக்கொண்டார் என்றும் தகவல் கிடைத்துள்ளது. 

 

விஜய் சேதுபதி வில்லனா..? 

 

ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட், நிறுவன தயாரிப்பில் பாலிவுட் முன்னணி நடிகரான ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், உருவாகும் திரைப்படம் “ஜவான்”. இந்தப்படத்தின் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டது. ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இந்தப்படத்தில் வில்லனாக நடிக்க விஜய்சேதுபதி படக்குழு கேட்டுள்ளதாம். முன்னதாக பாகுபலி படத்தில் பிரபாஸூக்கு வில்லனாக நடித்த ராணா டகுபதியிடம் இந்தப்படத்தில் வில்லனாக நடிக்க கேட்டு இருக்கிறார்கள்.

 

ஆனால் அவர் பிற படங்களில் பிஸியாக இருந்ததால் அவரால் நடிக்க இயலாமல் போனதாம். இந்த நிலையில்தான் அந்த ஆஃபர் விஜய்சேதுபதியிடம் சென்றிருக்கிறது.