நடிகர் விஜய் நடிப்பில் வரும் 14-ந் தேதி பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில், பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் நடிகர் விஜயிடம் நேர்காணல் செய்யும் நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பானது.


இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தனது வாழ்வில் நடந்த பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளை நெல்சனிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது, நெல்சன் நடிகர் விஜயிடம் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பற்றி கேட்டார். அதற்கு பதிலளித்த விஜய், தந்தை என்பவர் குடும்பத்தின் ஆணிவேர். கடவுளுக்கு அடுத்தபடி எனக்கு எனது அப்பாதான். நாம் மகனாக இருக்கும்போது தந்தையின் அருமை தெரியாது. தந்தையாக இருக்கும்போதுதான் அதன் அருமை தெரியும்.


ஒரு முறை பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் என்னை சந்திக்க வேண்டும் என்றார். நான்கூட எனக்குதான் கதை சொல்ல வந்துள்ளார் என்று நினைத்தேன். அவரிடம் கதை சொல்லுங்கள் என்றபோது அவர் என்னிடம் வந்து சஞ்சய்க்கு கதை தயார் செய்து வந்துள்ளேன் என்றார். சஞ்சயிடம் இதுதொடர்பாக கூறியபோது சஞ்சய்  என்னை ஒரு இரண்டு வருடங்களுக்கு விட்டுவிடுங்கள் என்றார்.  அவர் கேமரா பின்னால் செல்கிறாரா? அல்லது நடிக்கப்போகிறாரா? என்பது அவர் விருப்பம். ஒரு தந்தையாக என்னுடைய சப்போர்ட் அவருக்கு இருக்கும். அவர் விருப்பப்படி செய்ய நான் ஒத்துழைப்பேன் என்றார்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண