நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் முதற்கட்ட படிப்பு சென்னையில் நடந்த நிலையில், 2 ஆம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது.  விறுவிறுவென படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் அந்த போர்ஷனும் முடிவடைந்து விட்டது. இது குறித்து அப்போதே அப்டேட் செய்த தயாரிப்பு நிறுவனம், “  தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்தப் படப்பிடிப்பில் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது." எனக் குறிப்பிட்டது.






இந்நிலையில் நடிகர் விஜயின் ரீசண்ட் வீடியோ இன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. விமான நிலையத்தில் மாஸ்க் அணிந்துகொண்டு பவ்வியமாக விஜய் நடந்து செல்லும் வீடியோவை அவரது ரசிகர்கள் பலரும் ஷேர் செய்துள்ளனர்.அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக விஜய் விமான பயணம் மேற்கொண்டு இருக்கலாம் என பதிவிட்டு வருகின்றனர். 










‘வாரிசு’ வம்சி இயக்கும் ‘வாரிசு’ படத்தில் ஏற்கெனவே தென்னிந்திய திரைப்பிரபலங்கள் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் நிலையில், இப்படம் ஒரு 'பான் இந்தியா' படமாக இருக்கும் எனப் பலரும் தெரிவித்து வந்தனர். படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.


கில்லி படத்துக்கு பிறகு பிரகாஷ்ராஜும் விஜயோடு சேர்ந்து இப்படத்தில் நடித்து வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக அவரது தீவிர ரசிகையும் தெலுங்கு திரையுலக பிரபல நடிகையுமான ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். நடிகர் விஜய்யின் 66ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு வாரிசு எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், 2002ல் வெளியான ‘யூத்’ படத்தில் விஜய்யின் சூப்பர் ஹிட் பாடலான “ஆல் தோட்ட பூபதி” பாடலை ரீமிக்ஸ் செய்ய ‘வாரிசு’ படத்தின் இசையமைப்பாளர் தமன் முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.



இருபது வருடங்களுக்கு முன்பு எப்படி இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்ததோ அதே போன்று இந்த ரீ மிக்ஸ் பாடலும் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘யூத்’ படத்திற்கு இசையமைத்த மணி ஷர்மாவின் வழிகாட்டுதலின் பேரில் தமன் ரீமிக்ஸ் மூலம் அவரை கவுரவிப்பார் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக, கடந்த ஜுன் 22 ம் தேதி விஜயின் பிறந்தநாளான்று தளபதி 66 படத்தின் பெயர் வெளியிடப்பட்டது. தொடர்ந்து அன்றைய நாளில் விஜய் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் விதமாக அடுத்தடுத்து 3 போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது.