‘தளபதி 66’ படத்திற்காக விமான நிலையத்தில் இருந்த நடிகர் விஜயின் புதிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘தளபதி 66’ திரைப்படத்தின் பூஜை கடந்த மாதம் சென்னையில் தொடங்கியது. படத்தின் முதல் ஷெட்யூல் சென்னையில் முடிந்ததைத் தொடர்ந்து, ஹைதராபாத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்டில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது.
‘தளபதி 66’ படக்குழு இன்று முதல் இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்பைத் தொடங்க ஏற்கெனவே ஹைதராபாத்தை சென்று அடைந்தது. மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினருடன் சேர விஜய் நேற்று இரவு சென்னையில் இருந்து ஹைதராபாத் சென்றார். ஹைதராபாத் விமான நிலையத்தில் விஜய் புறப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வீடியோ:
‘தளபதி 66’ படத்தில் ரஷ்மிகா நாயகியாகவும், சரத்குமார் விஜய்க்கு அப்பாவாகவும், ஷாம் அண்ணனாகவும் நடிக்கின்றனர். பிரகாஷ் ராஜ் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நடைபெற உள்ளது. தயாரிப்பாளர்கள் 2023 பொங்கல் வெளியீட்டை இலக்காகக் கொண்டுள்ளனர். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை கார்த்திக் பழனி கவனித்து வருகிறார். படத்தொகுப்பை பிரவீன் கேஎல் மேற்கொண்டுள்ளார்.
இதனிடையே, நடிகர் அஜித்குமார் தொடர்ச்சியாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடத்தி வருவதால் இங்கு இருக்கும் பெப்சி தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக ஆர். கே. செல்வமணி குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகர் அஜித், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோருக்கு எங்கள் நேரடியான வேண்டுகோள். நீங்கள் அங்கு சென்று படப்பிடிப்பு நடத்துவதால், எங்கள் தொழிலாளர்களுக்கு தொழில்நஷ்டம் ஏற்படுகிறது. எங்களுடைய வேண்டுகோளை நீங்கள் ஏற்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்று ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்கள் சந்திப்பின்போது வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்