பிரபல தொலைக்காட்சி நிகழ்த்தும் ’மாஸ்டர் செஃப்’ என்னும் சமையல் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.  இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கிராமப்புற நடனக்கலைஞர்களுடன் விஜய் சேதுபதி துள்ளல் ஆட்டம் போட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

  






நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராகக் களமிறங்கும் இரண்டாவது நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.தெலுங்கிலும்  வெளியாகும் இந்த நிகழ்ச்சியை அக்கட தேசத்தில் தமன்னா தொகுத்து வழங்குகிறார். ஆஸ்திரேலிய டிவி சீரிஸான  மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியைத் தழுவி இந்த நிகழ்ச்சி எடுக்கப்படுகிறது. இது ஆஸ்திரேலியாவில் கடந்த 1990ம் ஆண்டு முதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஹாலிவுட்டில் இந்த நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் வரவேற்பு உள்ளது, 50க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி தற்போது இந்தியாவிலும் ஒளிபரப்பாகவுள்ளது. தமிழில் இந்த மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை பிரபல நடிகர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.     


அதே சமயம் கன்னடத்தில், கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப் மாஸ்டர் செஃப் கன்னடா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்நிலையில் மாஸ்டர் செஃப் தெலுங்கு விரைவில் ஒளிபரப்பாகவுள்ள நிலையில் அதை பிரபல நடிகை தமன்னா தொகுத்து வழங்குகிறார். இதன் மூலம் தமன்னா முதன்முதலில் தொகுப்பாளராக அறிமுகமாகவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.