உங்களுடைய வாக்குகளை நன்றாக சிந்தித்து போடுங்கள் என நடிகர் விஜய் சேதுபதி பேசிய பழைய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.


நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியானது கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் தேர்தல் 7 கட்டங்களாக ஜூன் 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையானது நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்கவுள்ள நிலையில் 40 தொகுதிகளில் எந்தெந்த வேட்பாளர்கள் களமிறங்க போகிறார்கள் என்ற எதிர்பாப்பு எழுந்துள்ளது. 


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டியானது நிலவுகிறது. இதில் திமுகவில் மட்டும் தொகுதி பங்கீடு நடைபெற்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். மற்ற கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் தேர்தல் ஆணையம் தரப்பில் மக்களுக்கு வாக்களிப்பது தொடர்பான பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 


இப்படியான நிலையில் தமிழ்நாட்டின் அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சூடுபிடித்துள்ளது. ஜெயிக்கப்போவது யார், வாக்குகளை பிரிப்பது யார்?, கூட்டணி சேர்ந்ததால் லாபம் கிட்டியதா? என்பதெல்லாம் இன்னும் சில வாரங்களில் தெரிந்து விடும். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவு முக்கியமானதாக இருக்கலாம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது






இந்நிலையில் கல்லூரி நிகழ்வு ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதி பேசியது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அதில், “அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே, பார்த்து ஓட்டு போங்க. நல்லா சிந்தித்து ஓட்டு போடுங்க. ஓட்டுப்போடுவதும் முக்கியம். எப்பவும் நம்ம ஊர்ல ஒரு பிரச்சினை, நம்ம காலேஜ்ல ஒரு பிரச்சினை, நம்ம நண்பனுக்கு, நம்ம மாநிலத்துக்கு ஒரு பிரச்சினைன்னு சொல்றவங்க கூட சேருங்க. ஆனால் நம்ம சாதிக்கொரு பிரச்சினை, மதத்துக்கு ஒரு பிரச்சினைன்னு சொல்றவங்க கூட சேராதீங்க. சொல்றவன் அத்தனை பேரும் நம்மளை தூண்டி விட்டுட்டு அவன் போய் வீட்டுல போலீஸ் பாதுகாப்போட உட்கார்ந்துக்குவான். நம்ம தான் மாட்டிப்போம். நல்லா புரிஞ்சிகோங்க” என விஜய் சேதுபதி தெரிவித்திருப்பார். 




மேலும் படிக்க: Priyamani: துன்புறுத்தப்படும் கோயில் யானைகள்.. பிரியாமணி செய்த செயலால் நெகிழ்ந்த பக்தர்கள்!