மக்கள் செல்வன் என அழைக்கப்படும் விஜய் சேதுபதி பலருக்கும் ஃபேவரெட் . ரசிகர்கள் மட்டுமல்லாது பிரபலங்களும் இவரின் இயல்பான பேச்சு, நடிப்பு மற்றும்  தோற்றத்தை   கண்டு வியப்பதாக பலமுறை தெரிவித்துள்ளனர். அமேசான் பிரைம் ஒடிடியில் வெளியான பிரபல வெப் தொடரான ‘ஃபேமிலி மேனின் ‘ கதாநாயகன்  மனோஜ் பாஜ்பாய் , இந்திய பிரபலங்கள் கலந்துக்கொண்ட நேர்காணலில் விஜய் சேதுபதியை கட்டியணைத்து  ”இவருடன் நான் கூடுதல் நேரம் செலவிட விரும்புகிறேன் ” என கூறியிருந்தார். விஜய் சேதுபதியும் ஃபேமிலி மேன் மூன்றாம் பாகத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் உலா வந்தன. ஃபேமிலி மேன் இரண்டாம் பாகத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் , விஜய் சேதுபதி எப்படி இதற்கு ஒப்புக்கொண்டார் என்ற கேள்வியை நெட்டிசன்கள் முன்வைக்க தொடங்கினர். இந்நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதி அளித்த பேட்டி ஒன்றில் அதனை மறுத்துள்ளார். ” நான் இப்போ ஷாகித் கபூருடன் ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறேன், ஃபேமிலி மேனில் நடிக்கவில்லை. ஆனால் அதன் கதாநாயகன்   மனோஜ் பாஜ்யுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது “ என தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 





 மேலும்  வாழ்க்கை லட்சியம் என்ன என்ற கேள்விக்கு “ எனக்கு லட்சியம் என ஒன்றும் கிடையாது, மனம் போற போக்கில் அப்படியே பயணிப்பேன். போகும் வழியில் நிறைய கற்றுக்கொள்வேன், ஒரே இடத்தில் இருந்து அறிவை அப்டேட் செய்யாமல் இருக்க எனக்கு பிடிக்காது “ என பதிலளித்துள்ளார். இது ஒரு புறமிருக்க  ,  65 நாட்கள் முதல்வரின் ஆட்சி எப்படி இருக்கிறது என்ற செய்தியாளரின் கேள்விக்கு  விஜய் சேதுபதி அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் “ ரொம்ப சிறப்பா பண்ணிட்டு இருக்காரு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நான் மட்டுமல்லாமல் எனது நண்பர்கள், வாகன ஓட்டுநர், உதவியாளர், பொதுமக்கள் என அனைவரிடமும் முதல்வர் ஆட்சி குறித்து கேட்பேன். அவர்களும் இதைத்தான் சொல்லுவாங்க . இதை நான் முதல்வரை சந்தித்த பொழுது நேரடியாகவே கூறினேன் “ என தெரிவித்துள்ளார்.


 






இதற்கு கீழே கமெண்ட் செய்த ரசிகர்கள் “மனுசன் உயர உயர போறாரு ,இவரை எப்படி பிடிக்காமல் போகும் எனத் தோன்றுமளவிற்கு  தன் திரை மொழியில் கவர்ந்தார்.திரையில் உருவாக்கிய பிம்பத்தை ,திரைக்கு வெளியிலும்  ஓரளவிற்கு நேர்மையோடு maintain செய்கிறார்” என புகழ்ந்து வருகின்றனர். விஜய் சேதுபதி தற்போது கோலிவுட், டோலிவுட், மல்லுவுட் , பாலிவுட் என பிஸியாக நடித்துக்கொண்டு பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் களம் கண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.