வாரிசு படப்பிடிப்பு தளத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் நடிகர் விஜய் எடுத்துகொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. விஜய்யின் 66வது படமாக உருவாகி வரும் இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. குடும்ப கதையாகி உருவாகி வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தெலுங்கின் மிகப்பெரிய தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரிக்கிறார். 






இந்த படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ வெளியானது முதல், ரசிகர்களிடமிருந்து வரவேற்பும், விமர்சனங்களும் எதிர் கொண்டு வருகிறது வாரிசு திரைப்படம். இந்த நிலையில் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன் நடிகர் விஜய் எடுத்துகொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


நடிகை ராஷ்மிகா மந்தனா வெள்ளை நிற உடையில் சிரித்த முகத்துடன் இருக்க, அவருக்கு அருகில் நடிகர் விஜய் பிங்க் நிற டி-சர்ட்டில் க்யூட்டாக இருக்கிறார். இதை பார்த்த விஜய் ரசிகர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் பார்த்த மகிழ்ச்சியில் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 






லீக் ஆன காட்சிகள்


சமீபத்தில் கூட நடிகர் விஜய், ஒரு பாடலுக்கு நடனமாடும் காட்சி வெளியாகி படக்குழுவை ஆட செய்தது. இதற்கு முன்னரும் நடிகர்கள் விஜய் மற்றும் பிரபு இடம்பெற்ற ஒரு காட்சியும் இணையத்தில் கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு முன்னரும், விஜய் கோட் சூட்டில் பேசுவது போன்ற ஒரு காட்சியும் வெளியாகி படக்குழுவினருக்கு ‘பகீர்’ கொடுத்தது.  இப்படி திருட்டுத்தனமாக படம்பிடிக்கப்பட்டு வெளியிடப்படும் காட்சிகளால் ரசிகர்களுக்கு படத்தின் மேல் உள்ள ஆர்வம் குறைந்து விடுமோ என படக்குழு பயந்து கொண்டிருக்கிறது. படக்குழுவை விட விஜய் ரசிகர்கள் இதனால் டென்ஷனாகி வருகின்றனர். இப்படியே ‘சூட்டிங்கும்’ ‘லீக்’குமாய் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.