தமிழ் திரையுலகத்தில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் விஜய். இவரை இவர் ரசிகர்கள் "தளபதி" என செல்லமாக அழைப்பது வழக்கம். விஜயின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி அது பேசுபொருளாக மாறுவது வழக்கமான ஒன்றுதான். ஏற்கனவே விஜய்  சைக்கிளில்  வாக்கு செலுத்தச்சென்ற காட்சிகள் தேர்தல் நாளிலும், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அடுத்தடுத்த நாட்களிலும் வைரலானது. ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை  கொடுத்தாலும், அரசியல் வட்டாரத்தில் அது பெரிய விவாதங்களையே கிளப்பியது.. அந்த  மாதிரியான  மாஸ் புகைப்படங்களுக்கு மத்தியில், தற்போது விஜயின் க்யூட் புகைப்படம் ஒன்றும் வெளியாகி, நேற்றுமுதல் செம வைரலாகி வருகிறது. இதனை அவரது நண்பரும் நடிகருமான ஸ்ரீநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிந்துள்ளார்.





அந்த புகைப்படம் விஜயின் பள்ளிப்பருவத்தில் எடுத்த ஒன்று, அதுவும் "கின்டர்கார்டன்" டைமில் எடுக்கப்பட்ட புகைப்படம். அந்த புகைப்படத்தில் விஜய் தனது நண்பர்களுக்கு மத்தியில் அமர்ந்திருக்கிறார். குறிப்பாக  இரண்டு தோழிகளுக்கு நடுவில் அமைதியாக அமர்ந்து ஃபோட்டோவிற்கு போஸ் கொடுத்துக்கொண்டிருக்கிறார். இதனை விஜய் ரசிகர்கள் வலைதள பக்கங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள். முன்னதாக  விஜய்  தனது நண்பர்களுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படமும் வெளியாகி , வைரலானது குறிப்பிடத்தக்கது




இது ஒரு புறம் இருக்கு, விஜய் நடிப்பில், பெயர் வைக்கப்படாத அவரது 65 வது படம் தயாராகி வருகிறது. தற்போது இது "தளபதி 65" என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை இளம் இயக்குநர் நெல்சன் இயக்குகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவின் , ஜார்ஜியாவில் எடுக்கப்பட்ட நிலையில், படக்குழு இந்தியா திரும்பியுள்ளது.

இந்நிலையில் படத்தில் விஜயுடன் செல்வராகவனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே செல்வராகவன் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக சொல்லப்பட்டது. இதனை பிரபுவின்  சிவாஜி ப்ரொடக்ஷன் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின‌.


ஆனால் சில காரணங்களால் அந்த படப்பிடிப்பு தொடங்கவில்லை பிறகு விஜய் மாஸ்டர் படத்தில் நடிக்கவும், செல்வராகவன்  சூர்யாவை வைத்து NGK படத்தை இயக்கவும் சென்றுவிட்டார். ஆனால் இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளியாகும் படத்திற்காக விஜய் மற்றும் செல்வராகவன் ரசிகர்கள் காத்திருந்தனர்.  ஆனால் அது அவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கக்கூடிய இந்த அறிவிப்பு  அவர்களது ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. செல்வராகவன் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் "சானி காயிதம்" படத்தில் நடித்து வருகிறார். திரைக்கு பின்னால் இருந்து பழகிய  இயக்குநர் செல்வராகவன், முதல் முறையாக நடிகர் செல்வராகவனாக இந்த படத்தில் அவதாரம் எடுத்திருக்கிறார். படத்தில் முக்கியமான வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.