கோலிவுட் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட ரசிகர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் . அதில் ஒருவர்தான் நடிகர் விஜய். அப்பாவின் உதவியால் கோலிவுட்டில் எளிமையாக குடியேறிவிட்டாலும் கூட ,தனது விடா முயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் உயர்ந்தவர் என்பதில் எந்த மாற்றுக் கருத்துமே கிடையாது. 10 வருடங்களுக்கு முன்னதாக தனது திரைப்பட புரமோஷன் விழாவில் கலந்துக்கொண்ட விஜய் , தன்னுடன் பயணிக்கும் சக நடிகர்களான அஜித், சிம்பு , விக்ரம் உள்ளிட்ட நடிகர்களிடம் தான் ரசிக்கும் விஷயங்கள் என்ன என்பது குறித்து வெளிப்படையாக பகிர்ந்திருக்கிறார்.
சிம்பு, தனுஷ்,ஜெயம் ரவி , ஜெய் எல்லாரையும் பிடிக்கும். எல்லார்க்கிட்டையும் ஒவ்வொரு விஷயத்தை நான் விரும்புறேன். தனிப்பட்ட விதத்தில் ஒவ்வொருவரும் திறமையானவங்க. எல்லாரிடமும் ஒரு ஃபயர் இருக்கு. சிம்புக்கிட்ட எனக்கு பிடித்த விஷயம் , அவருடைய எனர்ஜி. திரையில அவருடைய எனர்ஜி செமையா இருக்கும். விக்ரமை பொறுத்தவரையில் அவர் ஒவ்வொரு படத்திற்கும் தன்னை வருத்திக்கிட்டு பண்ணுற விஷயங்கள் , அந்த கேர்கடருக்காக அவர் செய்யுற விஷயங்களை பார்த்து வியந்திருக்கேன்.
குறிப்பா அந்நியன் படம் பார்த்துட்டு வாய்ஸ்ல இவ்வளவு மாறுதல்கள் கொடுக்க முடியுமா அப்படினு ஆச்சர்யப்பட்டேன். சூர்யாவுடைய நடிப்புல எனக்கு ரொம்ப பிடித்தது பிதாமகன். இப்போதும் அவருடைய போர்ஷன்ல காமெடி நல்லா வொர்க் அவுட் ஆகியிருக்கும். அஜித்கிட்ட பிடித்த விஷயம் அவருடைய தன்னம்பிக்கை” என பகிர்ந்திருந்தார் நடிகர் விஜய்.
‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் (Beast) படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் ஒரு பகுதியாக, முதல் பாடல் கடந்த மாதம் 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதி அனிருத் இசையமைத்துள்ள அரபிக்குத்து பாடல் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஹிட் அடித்து இருக்கிறது. அதனைத்தொடர்ந்து வெளியான போஸ்டரும் வைரலான நிலையில், விஜய் குரலில் ‘ஜாலிலோ ஜிம்கானா’ பாடலும் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதனை தொடர்ந்து படத்தின் ட்ரைலரை வெளியிட்டனர் படக்குழு. சில தினங்களுக்கு முன்னதாக வெளியான அதனை கொண்டாடி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க , ரசிகர்கள் கூர்கா படத்தின் ட்ரைலருடனும் பீஸ்ட் படத்தை ஒப்பிட்டு வந்தனர். எது எப்படியோ ஒரு வழியாக ட்ரைலர் வெளியான குஷிதான் ரசிகர்களுக்கு.