The GOAT update : ரசிகர்களே விசில்போட தயாரா! 'தி கோட்' படக்குழு கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட் என்னன்னு பாருங்க...
THE GOAT : நடிகர் விஜய்யின் வர இருக்கும் படமான 'தி கோட்' படத்தை வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் ஐமேக்ஸ் ஸ்கிரீனில் கண்டு ரசிக்கலாம்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'. பிரஷாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம், மோகன், பிரேம்ஜி, அஜ்மல் உள்ளிட்ட ஏராளமானோரின் நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இது மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
Just In





யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் ஏற்கனவே இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றாலும் பெரிய அளவில் வரவேற்பை பெற தவறியது. செப்டம்பர் 5ம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளதால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் படம் குறித்த எதிர்பார்பை மக்கள் மத்தியில் ஹைப்பிலேயே வைத்து கொள்ளும் வகையில் அடுத்தடுத்து ஒவ்வொரு அப்டேட்டாக வெளியிட்டு வருகிறார்கள்.
இருப்பினும் படத்தின் டிரைலர் எப்போ வரும் என்றே ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். இது குறித்த கேள்விக்கு இயக்குநர் வெங்கட் பிரபு பதிலளிக்கையில் படத்தின் ரிலீஸ் தேதிக்கு பத்து நாள் இடைவெளி இருக்கும் சமயத்தில் வெளியிடப்படும் என தெரிவித்து இருந்தார்.
மூன்று பாடல்களை தொடர்ந்து 'தி கோட்' படம் குறித்த மற்றுமொரு முக்கியமான அப்டேட் ஒன்றை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது செப்டம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கும் 'தி கோட்' படம் ஐமேக்ஸ் திரையில் வெளியிடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. மேலும் இந்த தகவலை ஐமேக்ஸ் அவர்களின் அபிஷியல் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.