தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவரான நடிகர் விஜய் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கியுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


இன்ஸ்டாகிராமில் கால் பதித்த விஜய்


இன்று மாலை இன்ஸ்டாகிராம் கணக்கை விஜய் தொடங்கி புகைப்படம் பகிர்ந்துள்ள நிலையில், அரை மணி நேரத்தில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்களும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கமெண்டுகளையும் பகிர்ந்து விஜய்க்கு இன்ஸ்டா வாசிகள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.


மேலும் பல திரை நட்சத்திரங்களும் இன்ஸ்டாகிராமில் விஜய்க்கு வரவேற்பு தெரிவித்து கமெண்ட் செய்தும்,  அவருக்கு லைக்ஸ்களை வாரி வழங்கியும் ஃபாலோ செய்தும் வருகின்றனர். 


மேலும் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், அட்லி, நடிகைகள் ராஷ்மிகா மந்தானா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா லெஷ்மி, நடிகர்கள் கவின், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் விஜய்யை இன்ஸ்டாவில் பின் தொடரத் தொடங்கியுள்ளனர்.


 






மேலும் நொடிக்கு நொடி விஜய்யின் இன்ஸ்டா அக்கவுண்டுக்கு ஃபாலோயர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவரது முதல் பதிவும் லட்சக்கணக்கான லைக்ஸ்களையும் கமெண்ட்ஸ்களையும் அள்ளி வேட்டை நடத்தி வருகிறது.


இன்ஸ்டாகிராமை தெறிக்க விட்ட பிரபலங்கள்


முன்னதாக ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஜெனிஃபர் ஆனிஸ்டன் இன்ஸ்டாகிராமில் இணைந்தபோது அவருக்கு இதேபோல் ஃபாலோயர்களின் எண்ணிக்கை அதிகரித்ததுடன் இன்ஸ்டாகிராம் ஸ்தம்பித்து அவரது கணக்கு முடங்கியது.


ஃப்ரெண்ட்ஸ் தொடரில் நடித்து உலகம் முழுவதும் பெரும் நட்சத்திரப் பட்டாளத்தைக் கொண்ட நடிகை ஜெனிஃபர் ஆனிஸ்டன், ’ஃப்ரெண்ட்ஸ் ரீயூனியன்’ புகைப்படத்துடன் சென்ற 2019ஆம் ஆண்டு இதே போல் திடீரென இன்ஸ்டாகிராமில் இணைந்தா. தொடர்ந்து ஒரு மணி நேரத்தில் லட்சக்கணக்கான ஃபாலோயர்களைப் பெற்றதுடன். 24 மணி நேரத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்களையும் அவரது கணக்கு அள்ளியது. அதேபோல், அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு ஸ்தம்பித்து முடங்கியது. 


இந்நிலையில் நடிகர் விஜய் இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி ஒரு மணி நேரத்தில் சுமார் 7 லட்சம் ஃபாலோயர்களை ஈர்த்துள்ளார். அதேபோல் அவரது முதல் பதிவும் நொடிக்கு நொடி லைக்ஸ் அள்ளி வருகிறது.


மேலும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #ThalapathyOnInstagram எனும் ஹாஷ்டேகும் ட்ரெண்டாகி வருகிறது.


மேலும் படிக்க: Manisha Koirala on Baba: பாபா படத்தால் என் மார்க்கெட்டை இழந்தேன்... மனிஷா கொய்ராலாவின் ஸ்டேட்மென்ட்! கொந்தளிக்கும் ரஜினி ரசிகர்கள்