தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகராக உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கானவர்களின் ஃபேவரைட் ஹீரோவாக கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் விஜய். அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி மிகவும் பிஸியாக நடித்து வரும் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வாரிசு மற்றும் லியோ திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூலிலும் சாதனை படைத்தது. 


 



விஜய் படங்கள்:



அதன் தொடர்ச்சியாக தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் கூட்டணி சேர்ந்துள்ள திரைப்படம் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (GOAT) திரைப்படம். நடிகர் பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல், பிரேம்ஜி, ஜெயராம், சினேகா, மீனாட்சி சௌத்ரி, லைலா, யோகி பாபு, விடிவி கணேஷ், மோகன், அரவிந்த் ஆகாஷ் என மிக பெரிய திரை பட்டாளம் நடித்து வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க மிகவும் மும்மரமாக படப்பிடிப்பு  நடைபெற்று வருகிறது. இது தவிர 'லியோ 2' படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 'கைதி 2' மற்றும் 'தலைவர் 171' படத்திற்கு பிறகு இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 



பிளாஷ் பேக் வீடியோ :


இந்நிலையில் நடிகர் விஜய்யின் பிளாஷ் பேக் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்ட வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா, இலியானா, சத்யன், சத்யராஜ் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான 'நண்பன்' படத்தின் கொண்டாட்டத்தின் போது நடிகர் விஜயிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு விஜய் பதில் அளித்த அந்த சுவாரஸ்யமான வீடியோ சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது. 


 






விஜய்யின் பேவரட் ஹீரோயின் :


காலேஜ் படிக்கும் போது உங்களுடைய ஃபேவரட் ஹீரோயின் யார்? என கேட்கப்பட்டது. அதற்கு அவர் "நாம எங்க காலேஜில் படிச்சோம்" என பக்கத்தில் இருந்த ஸ்ரீகாந்த்திடம் கேட்க அது அனைவருக்கும் கேட்டு விட  "காலேஜில் படிச்ச காலம் இல்ல காலேஜில் இருந்த காலத்தில் உங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஹீரோயின் யாருன்னு சொல்லுங்க" என்றார்கள். "எனக்கு சிம்ரன் ரொம்ப பிடிக்கும்" என்றார் விஜய். "சிம்ரன் கிடையாது. அவங்க உங்க கூட நிறைய படத்துல ஜோடியா நடிச்சு இருக்காங்க. நடிக்க வர்றதுக்கு முன்னாடி நீங்க காலேஜில் இருந்த காலத்தில் நடிச்ச ஹீரோயின்களில் உங்களுடைய ஃபேவரட் யார்?" என்றார்கள். கொஞ்சம் யோசித்த விஜய் எனக்கு நடிகை அமலா, நடிகை நதியா அவங்களை எல்லாம் ரொம்ப பிடிக்கும் என்றார். இந்த வீடியோ விஜய் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.