பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத்தின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் லைகர். விஜய் தேவரகொண்டா முரட்டு குத்துச் சண்டை வீரராக நடிக்க, ரம்யா கிருஷ்ணன் அவருக்கு அம்மாவாக நடித்திருந்தார். இப்படத்தில், குத்துச் சண்டை வீரர் மைக்டைசனும் கேமியோ ரோலில் வந்திருந்ததால், படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்புகள் எழுந்தது. கடைசியில் “தேவையில்லாத எமோஷனல் காட்சிகளுடன் படமே க்ரிஞ் களஞ்சியமாக உள்ளது” என பலரும் படத்தை விமர்சித்தனர்.
லைகருக்குப் பிறகு, விஜய் தேவரகொண்டா ஜன கண மன மற்றும் குஷி என்ற ஆகிய இரண்டு படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதில் பூரி ஜெகநாத் இயக்கும் ஜன கண மன படத்தில் ராணுவ அதிகாரியாக அவர் நடிப்பதாக முன்னதாக அறிவிப்பு வெளியான நிலையில், லைகரின் தோல்வியால் அந்தப்படம் கைவிடப்படுவதாக கூறப்பட்டது. ஆனால், அவை அனைத்தையும் பொய்யாக்கும் வகையில் விஜய் தேவரகொண்டா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு படத்தை வெளியிட்டார். அதில், ராணுவ ஆடையில் அவர் துப்பாக்கி சுடும் வீரராக மாறி, முகாம் தளத்தில் இந்திய ராணுவ அதிகாரிகளுடன் பயிற்சி பெறுவது போன்று அமைந்து இருந்தது. இதன் மூலம் பூரி ஜெகன்நாத்துடன் அடுத்த படத்தில் அவர் இணைந்துள்ளது உறுதியானது.
விஜய் தேவரகொண்டாவின் புதிய வீடியோ
பூரி ஜெகன்நாத்துடன் மீண்டும் இணைந்துள்ள விஜய் தேவரகொண்டா, தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டுள்ளது போன்று வீடியோ பதிவில் இடம் பெற்றுள்ளது.
ஏற்கனவே, லைகர் படத்தில் தோல்வியை தொடர்ந்து கடுப்பில் உள்ள ரசிகர்கள் இந்த வீடியோவினால் “வெந்த நெருப்பில் வேலை பாய்ச்சியது போல” செம வெறுப்பில் உள்ளனர். இதனால், “ஒரு முறை அடிப்பட்டது போதாதா தலைவா..” எனவும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
திருமண வதந்தி:
லைகர் படத்தின் தோல்வியை தொடர்ந்து சைலண்ட் ஆளாக மாறியுள்ள விஜய் தேவரகொண்டாவைப் பற்றி அவ்வப்போது திருமண வதந்திகளும் எழுந்த வண்ணம் உள்ளன. அவ்வகையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் ஒன்றாக மாலத்தீவுகளுக்கு பயணம் செய்ததாக சர்ச்சை கருத்துகள் எழுந்தன. இவர்கள் இருவரும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் அகிய படங்களில் இணைந்து நடித்துள்ளதால், பல பேருக்கு இவர்கள் காதலிக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.