கிருஷ்ணா ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடும் நிலையில், நடிகர் விஜயின் சிறு வயது போட்டோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இந்த ப்ளாக் அண்ட் வொயிட் போட்டோவில் நடிகர் விஜய் புல்லாங்குழலை கையில் ஏந்திய படி போஸ் கொடுத்துள்ளார்.
இந்த போட்டோவை ஷேர் செய்தவர் இது தளபதியா இல்ல தலையா யாரு பா இந்த நடிகர் என்று கேள்வி கேட்டு, அவரே ஹாஸ்டாக் தளபதி என பதிலும் அளித்துள்ளார். இப்படம், ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி அன்று மட்டும் வைரலாகிறது. அதுபோக இந்த படம் ஏதோ எடிட் செய்தது போல் இருக்கிறது. இப்படி ஏதாவது செய்து நடிகர் விஜயை பேசு பொருளாக மாற்றும் விஜயின் ரசிகர்களை நினைத்தால்தான் சற்று வேடிக்கையாக உள்ளது.
நடிகர் விஜய், ஹைதராபாத்தில் நடைபெறும் வாரிசு பட ஷூட்டிங்கில் பயங்கர பிசியாகவுள்ளார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், யோகி பாபு மற்றும் பிரபு ஆகியோர் நடிகின்றனர். வாரிசு படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆக விஜய் ரசிகர்கள் அனைவரும் தளபதி பொங்கலை கொண்டாட ஆர்வமாக உள்ளனர் என்பது திண்ணம்.
வாரிசு படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் இயக்குநர் லோக்கேஷ் கனகராஜின் தளபதி 67 படத்தில் நடிக்க துவங்குவார் என்று எதிர்ப்பார்புகள் உள்ளது. ஆண்டு தோறும் விஜய் படம் ரிலீஸாகும் ஆனால், மாஸ்டர் படம் வெளியாகி நீண்ட நாட்களுக்கு பிறகு பயங்கர பில்ட்-அப்புடன் பீஸ்ட் வெளியானது. படத்தின் ப்ரோமோஷன் வேலைகள், பாடல்கள் ஆகிய அனைத்தும் தாறுமாறாக இருந்தாலும்படம் மொக்கையாகதான் இருந்தது. இப்போது நடித்து வரும் வாரிசு படத்தில் பரம்பரை பணக்கார ரோலில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடதக்கது.