தமிழ்த் திரையுலகின் முன்னணி கதாநாயகர் நடிகர் விஜய். இவரது திரைப்படங்களுக்கு என்று லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளங்கள் உள்ளது. கடைசியாக மாஸ்டர் படத்தில் நடித்த விஜய், தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.


கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தியா மட்டுமின்றி ஜார்ஜியாவிலும் நடைபெற்றது.






இந்த நிலையில், இயக்குனர் நெல்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். பீஸ்ட் திரைப்படத்தின் 100வது நாள் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் மேலே குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில், நடிகர் விஜய் மாசாக கண்ணாடி அணிந்து, ட்ரம்ஸ் வாசிப்பது போல அமர்ந்துள்ளார். அவருக்கு அருகில் நாயகி பூஜா ஹெக்டே மைக்கில் பாட்டு பாடுகிறார். அருகில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் கிட்டார் வாசித்துக் கொண்டு இருக்கிறார். விடிவி கணேஷ், ரெட்டின் கிங்ஸ்லி, பிஜோன் சுரோரா  ஆகியோரும் உள்ளனர்.




இந்த புகைப்படத்தை பார்க்கும்போது படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சியில் இடம்பெறுவது போல உள்ளது. பீஸ்ட் படத்தின் எந்த அப்டேட்டும் இல்லாமல் தவித்து வந்த விஜய் ரசிகர்களுக்கு இந்த புகைப்படம் இன்ப அதிர்ச்சியான அப்டேட்டாக அமைந்துள்ளது. தற்போது, சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.  





பீஸ்ட் படத்தில் நடிகர் விஜயுடன், பூஜா ஹெக்டே, யோகி பாபு, ரெடின்கிங்ஸ்லி, வி.டிவி, கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரங்களில் இயக்குனர் செல்வராகவன், டான்சிங் ரோஸ் புகழ் ஷபீர்கல்லக்கல், ஷைன் டாம் சாகோ ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.  இந்த படம் பொங்கல் பண்டிகை விருந்தாக திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண