80ஸ் காலகட்டத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய் பாபு. அடையாறு திரைப்படக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகளாக பயிற்சி பெற்று திரைத்துறைக்குள் நுழைந்த விஜய் பாபு கடந்த 40 ஆண்டுகளாக திரையுலகோடு தொடர்பில் இருந்து வருகிறார். ஆந்திராவில் இருந்து வளர்ந்த இவரின் இயற்பெயர் வெங்கடேஸ்வரா ரெட்டி. சினிமாவுக்காக தன்னுடைய பெயரை விஜய் பாபு என மாற்றிக்கொண்டுள்ளார். 


 



ஆரம்பக் காலகட்டம்:


ஆரம்பத்தில் நடிப்பில் ஆர்வமில்லாமல் நண்பனின் வற்புறுத்தலால் மட்டும் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பின்னர் படிப்படியாக நடிப்பில் நாட்டம் வந்ததும் இரண்டே ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றார். 1978ம் ஆண்டு வெளியான 'ஒரு வீடு ஒரு உலகம்' திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அடுத்ததாக அவர் நடித்த படம் தான் 'அவள் ஒரு தொடர்கதை'.


ரஜினியின் தம்பி :


சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் கடைசி தம்பி ராமுவாக ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் பாபு நடித்த திரைப்படம் தான் 'படிக்காதவன்'. அப்பாவியான பாசக்கார அண்ணனை ஏமாற்றும் ஒரு நெகட்டிவ் கேரக்டர் கொண்ட தம்பியாக பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதிக்கும் வகையில் நடித்திருந்தார்.  


அதன் தொடர்ச்சியாக குமரி பெண்ணின் உள்ளத்திலே, எங்கம்மா மகாராணி, கசப்பும் இனிப்பும் உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான 'படிக்கத்தான்' திரைப்படத்தில் நடித்திருந்தார். 


 



ஹோம் டூர் :


தற்போது 72 வயதாகும் நடிகர் விஜய் பாபு இன்றும் அதே எனர்ஜியுடனும் சுறுசுறுப்புடனும் காணப்படுகிறார். சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் தன்னுடைய பீச் ஹவுஸ் வீட்டை சுற்றி காட்டும் ஹோம் டூர் வீடியோ வெளியாகியுள்ளது. பல ஆண்டுகளாக திரைத்துறையில் தலைகாட்டாமல் இருந்த விஜய் பாபுவை யூடியூப் சேனல் மூலம் பார்த்ததில் அவர்களின் ரசிகர்கள் சந்தோஷம் அடைந்தார்கள். இந்த வீடியோ தற்போது ட்ரெண்டிகில் இருந்து வருகிறது. 


சினிமாவில் ஒரு நடிகராக இருப்பதுடன் ஒரு வெற்றிகரமான தொழில் அதிபராகவும் இருந்து வருகிறார் நடிகர் விஜய் பாபு. அவரைப் போலவே அவரின் மகன் ரமணாவும் திரைத்துறையில் ஒரு நடிகராக இருக்கிறார்.   


விஜய் பாபுவுக்கு கடலின் அலைகளை பார்த்துக்கொண்டே இருப்பது மிகவும் பிடிக்குமாம். அதனாலேயே பீச் வியூ இருக்கு வகையில் பீச் ஹவுஸ் ஒன்றை வாங்கியுள்ளார். அவருக்கு ஏராளமான வீடுகள் கார்கள் வைத்து கொள்ள எல்லாம் விருப்பம் கிடையாதாம். “எத்தனை வீடு இருந்தாலும் ஒரு வீட்டில் தான் வசிக்கிறோம், எத்தனை கார் இருந்தாலும் ஒரு காரை தான் பயன்படுத்த போகிறோம். அதனால் இந்த வீட்டை வாங்கியதும் சினிமாவில் இருந்து விலகிக் கொண்டேன்” எனக் கூறியுள்ளார் விஜய் பாபு. 


நடிகர் விஜய் பாபுவுக்கு இந்த பீச் ஹவுசில் நேரத்தை செலவிடுவது மிகவும் பிடிக்குமாம். ஆந்திராவில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தாலும்  வார இறுதி நாட்களில் இந்த பீச் ஹவுஸுக்கு வந்து தங்கி இன்பமாக தனது நேரத்தை செலவிடுவாராம். படிக்காதவன் படத்தின் அண்ணனாக நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போலவே இவருக்கும் பாபாஜி வழிபாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவராம்.