செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டு செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடபாக மிக முக்கியமான நப ஒருவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.


யார் இந்த முக்கியமான நபர் என்றால் வேறு யாரும் இல்லை நம் பிச்சைக்காரன் கதாநாயகன் விஜய் ஆன்டனி தான்.2000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் இருந்து நீக்குவது நாட்டில் கள்ளப்பணத்தில் புழக்கத்தை குறைக்கும் என தனது தாழ்மையான கருத்தை பகிர்ந்துள்ளார் விஜய் ஆண்டனி. ஏன் ஒவ்வொரு முறையும் டீமானிடைசேஷன் பற்றியோ? பணம் பற்றியோ? ஏதாவது பிரச்சனை என்றால் விஜய் ஆண்டனியின் கருத்து முக்கியமானதாக கருதப்படுகிறது தெரியுமா?


பிச்சைக்காரனும், பணமதிப்பிழப்பும்:


கடந்த 2016 ஆம் ஆண்டு ஒன்றிய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து  நீக்கியது. இந்த அறிவிப்பு பல்வேறு சிக்கல்களை மக்களுக்கு ஏற்படுத்தியது. இந்த முடிவு சரியானதா தவறானதா என விவாதங்கள் நடந்த சமயத்தில் மக்களால் அன்று பரவலாக ஷேர் செய்யப்பட்ட ஒரு வீடியோ என்றால் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் திரைப்படத்தின் ஒரு காட்சி தான். 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படத்தில் ஒரு பிச்சைக்காரர் ஒருவர் ரேடியோ நிகழ்ச்சியில் போன் செய்து இந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்றால் முதலில் புழக்கத்தில் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாயை செல்லாது என அரசு அறிவிக்க வேண்டும் என ஆலோசனைக் கூறியிருப்பார்.


அந்த காட்சியில் சொன்னதுபோல் அதே போல் ஒன்றிய அரசு பனமதிப்பிழக்கத்தை அறிவித்தது.மேலும் கருப்பு பணத்தைக் ஒழிக்க இது மிக பயனுள்ளதாக இருக்குமென்றும் அரசு தெரிவித்தது.இதை எல்லாம் முன்கூட்டியே பிச்சைக்காரன் படம் பேசியிருபப்தால் ரசிகர்கள் அன்றே கணித்தார் விஜய் ஆண்டனி என்கிற வகையான வீடியோக்களை பகிர்ந்து வந்தனர்.


வரவேற்ற விஜய் ஆண்டனி:


தற்போது பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்திருக்கும்  நிலையில் மீண்டும் ஒருமுறை ஒன்றிய அர்சு 2000 ரூபாயை புழக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது. இந்த அறிவிக்கும் படத்திற்கும் இந்த முறையும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என்று ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் இந்தப் படத்தின் மேல் அதிக கவனம் குவிந்து வருகிறது. தற்போது விஜய் ஆண்டனி பேட்டி ஒன்றில் 500 ரூபாய் நோட்டை செல்லாது என அறிவித்தபோது தான் அதை எதிர்த்ததாகவும், தற்போது 2000 ரூபாயை புழக்கத்தில் இருந்து நீக்குவதை தான் வரவேற்பதாக தெரிவித்துள்ளார். கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கு இந்த நடவடிக்கை உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பேசாமல்  நடிப்பதுடன் சேர்த்து விஜய் அண்டனி  பகுதி நேரமாக பொருளாதார ஆலோசகராக மாறிவிடலாம்.