நடிகர் விஜய் நடித்துள்ள லியோ(LEO) படம் குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல் ரசிகர்களிடையே சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 


லியோ படம் 


இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - நடிகர் விஜய் கூட்டணி 2வது முறையாக ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளனர்.  இந்த படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும் சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான்,மேத்தியு தாமஸ்,ஜோஜூ ஜார்ஜ், மடோனா செபாஸ்டியன், அனுராஜ் காஷ்யப், இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின் என பலரும் இப்படத்தில் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு கோலிவுட் வட்டாரத்தில் நிலவுகிறது. அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.


விறுவிறுப்பாக நடைபெற்ற ஷூட்டிங்


லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற்றது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளன்று நள்ளிரவு 12 மணிக்கும்,  மறுநாள் 2வது லுக் போஸ்டரும் வெளியானது. அன்று மாலை படத்தில் இடம் பெற்ற நடிகர் விஜய் பாடிய ‘நா ரெடி’ பாடல் வெளியானது.  இதனை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். 


இதற்கிடையில் லியோ படத்தில் விஜய் தொடர்பான காட்சிகள் கடந்த ஜூலை முதல் வாரத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் ஜூலை 14 ஆம் தேதி முடிந்தது. படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ளதால் அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


L.C.U -வில் இருக்கா? இல்லையா? 


இயக்குநர் லோகேஷ் கனகராஜின் படங்கள் ‘சினிமாடிக் யுனிவர்ஸ்’ வகையில் எடுக்கப்படுகின்றன. அதாவது முந்தைய படங்கள் ஏதாவது ஒரு வகையில் தற்போதைய படத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் விக்ரம் படத்தில் அதன் முந்தைய படமான கைதி படத்தின் காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும்.ஆனால் லியோ படம் அப்படிப்பட்ட  ‘சினிமாடிக் யுனிவர்ஸ்’ வகையில் இருக்காது என கூறப்பட்டது. ஆனால் ‘நா ரெடி’ பாடல் வெளியானபோது ரசிகர்கள் டீகோட் செய்து கண்டிப்பாக இந்த படத்தில் கைதி மற்றும் விக்ரம் படத்தின் காட்சிகள் இருக்கும் என்பதை உறுதி செய்தனர். 


வெளியான புதிய அப்டேட்


இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி லியோ படம் 2 பாகங்களாக எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் படத்தில் இறுதி 2ஆம் பாகத்திற்கான லீட் உடன் முடியும் என்றும், 2வது பாகம் 2025-2026 ஆண்டுகளில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. மேலும் லியோ படத்திற்காக விக்ரம் படத்தை தயாரித்த ராஜ்கமல் நிறுவனத்திடம் இருந்து ‘தடையில்லா சான்றிதழ்’ பெறப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருகிறது.