Maamannan: ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய ‘வைகைப்புயல்’ வடிவேலு.. பட்டையை கிளப்பும் மாமன்னன் அப்டேட்..!

மாமன்னன் படத்தில் நடிகர் வடிவேலு பாடல் ஒன்றை பாடியுள்ள தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Continues below advertisement

மாமன்னன் படத்தில் நடிகர் வடிவேலு பாடல் ஒன்றை பாடியுள்ள தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Continues below advertisement

தமிழ் சினிமாவில் ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகிய படங்களை இயக்கி திரையுலகினர், ரசிகர்களின் கவனம் பெற்ற இயக்குநரானார் மாரி செல்வராஜ். அவரின் அடுத்தப்படமாக ‘மாமன்னன்’ படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாகவும்,  கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில், வடிவேலு ஆகியோர் நடிக்கின்றனர். மாமன்னன் படத்திற்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் நிலையில் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். 

இப்படியான நிலையில் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி இரவு மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், மே 1 ஆம் தேதி இரண்டாவது போஸ்டரும் வெளியானது. இவை இரண்டும் ரசிகர்களை கவர்ந்தது. கையில் துப்பாக்கியுடன் வெள்ளை வேட்டி, சட்டையில் வடிவேலுவும், வாளுடன் உதயநிதி ஸ்டாலினும் இருக்க “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற கேப்ஷனும் போஸ்டரில் இடம் பெற்றிருந்தது. 

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய மாமன்னன் படத்தின் ஷூட்டிங் சேலம், சென்னை  என பல பகுதிகளில் நடைபெற்றது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அமைச்சராகி விட்டதால் இதுவே உதயநிதி ஸ்டாலினின் கடைசிப் படம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடிவேலு இப்படத்தில் பாடல் ஒன்றை பாடியுள்ளார். 

இதுதொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “வடிவேலுவுடன் இணைந்து இந்த பாடலை பதிவு செய்த அனுபவம் மறக்க முடியாதது. காரணம் அவர் ஸ்டுடியோவில் இருந்த அனைவரையும் சிரிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல் மறக்க முடியாத நிகழ்வாகவும் மாற்றினார்” என தெரிவித்துள்ளார். . இயக்குநர் மாரி செல்வராஜின் ஸ்டைல் ​​என்பதால் இந்தப் பாடல் கொஞ்சம் சீரியஸாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க: Actor Vijay: ’என் மகன் விஜய்க்காக இயக்குநர்களிடம் வாய்ப்பு கேட்டேன்...யாரும் முன்வரவில்லை” - நினைவுகளைப் பகிர்ந்த எஸ்.ஏ.சந்திரசேகர்

Continues below advertisement
Sponsored Links by Taboola