12ம் ஆண்டு வகுப்பு மாணவ, மாணவிகள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் காலை 10 மணிக்கு வெளியிட்டார். 

இதில், தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெளியான தேர்வு முடிவுகள் அடிப்படையில் விருதுநகர், திருப்பூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் 97 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளது. 

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை எவ்வளவு..?

தேர்வெழுதிய மொத்த மாணவர்கள் எண்ணிக்கை : 8,03,385

தேர்ச்சி பெற்றவர்கள் : 7,55,451

கடந்த ஆண்டை விட இந்தாண்டு ஒரு பாடத்தில் அதிக சதம்..!

கடந்த மே 2022 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை : 22,957

இந்தாண்டு மார்ச்/ஏப்ரல் 2023 பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை : 32,501

அதிலும், குறிப்பாக தமிழ் மொழிப்பாடத்தில் 2 மாணவர்கள் சதம் அடித்துள்ளனர்.  

முக்கிய பாடங்களில் 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை: 

தமிழ் 2
ஆங்கிலம் 15
இயற்பியல் 812
வேதியியல் 3909
உயிரியல் 1494
கணிதம் 690
தாவரவியல் 340
விலங்கியல் 154
கணினி அறிவியல் 4618
வணிகவியல் 5678
கணக்குப் பதிவியல் 6573
பொருளியல் 1760
கணினிப் பயன்பாடுகள் 4051
வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் 1334

தமிழ்நாட்டில் மாணவியர்களின் தேர்ச்சி சதவீதம்..!

தமிழ்நாட்டில் மாணவியர்கள் 4,05,753 (96.38%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் என்ன..?

தமிழ்நாட்டில் மாணவர்கள் 3,49,697 (91.45%) தேர்ச்சி அடைந்துள்ளனர். 

தேர்வெழுதிய மாற்றுத் திறனாளிகளின் தேர்ச்சி சதவீதம்..!

தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை : 4398

தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை: 3923 (89.20%)

தேர்வெழுதிய சிறைவாசிகளின் தேர்ச்சி சதவீதம் என்ன..?

தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை: 90

தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை: 79 (87.78%)