மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரலாற்றுப் பாத்திரமான குந்தவையாக நடிக்கிறார் நடிகர் த்ரிஷா. இதுதவிர தமிழில் அவர் வேறு எந்த படங்களிலும் தற்போது நடிக்கவில்லை என்றாலும் இந்த ஒரு குறிப்பிட்ட கதாப்பாத்திரம் அவருக்கான பெரும் கம்பேக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் தமிழ் திரையுலகில் தனது இதுநாள்வரையிலான பயணம், சகநடிகர்களுடனான உறவு, சர்ச்சை என பலவிஷயங்கள் குறித்து ஓபன் டாக்காகப் பேசியுள்ளார் அவர். அதிலிருந்து.. 






“என்னுடன் நடித்த சக நடிகர்களில் எனக்கு பிரியமானவர் விஜய். கில்லியில் நடித்தபோது எங்கள் இருவருக்கும் நடுவே ஒரு ராப்போவே இல்லை. ஆனால் தரணியின் குழு எங்களுடைய கெமிஸ்ட்ரியைக் கொண்டு வர நிறைய உழைத்தார்கள். அதன்பிறகு என்னுடைய கரியரில் விஜய்யுடன் தான் எனது அதிக ஹிட் படங்கள் அமைந்தது” என்றார். 


திரையுலகில் தொடக்கத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்த நயன்தாராவும் த்ரிஷாவும் ஒரு படத்தின் சர்ச்சையால் பின்னாளில் எதிரும் புதிருமானார்கள். அதுகுறித்து த்ரிஷாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ‘எனக்கும் நயன்தாராவுக்கும் இடையே பிரச்னை இருந்தது உண்மைதான். ஆனால் அது சில பொதுவான நண்பர்களால் உண்டானது. அப்போ இரண்டு பேருக்கும் இடையே அது பிரச்னையானது. ஆனால் பின்னாளில் நாங்கள் பேசத் தொடங்கிவிட்டோம். இப்போதும் நயன்தாரா என் நலனைதான் விரும்புவார் என எனக்குத் தெரியும். அதேபோல்தான் நானும் அவர் நலனை விரும்புகிறேன்.அப்போது போட்டி பொறாமை இருந்தது உண்மைதான். நம்பர் 1 பதவியெல்லாம் இருக்கானு எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். ஆனால் காலப்போக்கில் நான் மனதளவில் வளர ஆரம்பித்தேன். இப்போ எனக்கு என்று ஒரு பப்பிள் இருக்கு அதில் நான் மட்டும்தான். அங்கே ராணி நான்தான்’ என்றார். 


திரையுலகில் இருந்தாலே மனநலனை பாதுகாத்துக்கொள்வது மிகவும் முக்கியம் என்று பேசிய அவர் எமோஷனலாக தன்னை தயார்படுத்திக்கொள்ள ஆறுமாதம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.