தலைவாசல் விஜயின் மகள் ஒரு நீச்சல் வீராங்கனை ஆவார். இவருக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் அபராஜித்துக்கும் திருமணம் முடிவடைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் இவர்களின் நிச்சயம் முடிவடைந்த நிலையில் திருமணம் நடைபெற்றது.  இந்த ஜோடியின் திருமணத்தையொட்டி ஏராளமான பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறனர். 


நடிகர் தலைவாசல் விஜய் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும், சீரியல்களிலும் பல வருடங்களாக நடித்து வருகிறார். அதிலும் 1992- ஆம் ஆண்டு வெளியான தலைவாசல் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் பிரபலமானதால் அந்த பெயரை தன்னுடைய பெயருக்கு முன்னாள் இவர் சேர்த்துக் கொண்டார். 

தலைவாசல் விஜய் தேவர் மகன், மகளிர் மட்டும், விஷ்ணு, கருவேலம் பூக்கள், காதல் கோட்டை, காதலுக்கு மரியாதை, காதல் கோட்டை, பிரியமானவளே உள்ளிட்ட பல ஹிட் திரைப்படங்களில் தலைவாசல் விஜய்  முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்  200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்  நடித்திருக்கிறார். இவர் தன்னுடைய நடிப்புத் திறமையின் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர்.


இவர் கடந்த 2010ஆம் ஆண்டு யுகபுருஷன் என்ற திரைப்படத்திற்காக கேரள அரசின் கேரள மாநில விருது, 2012ஆம் ஆண்டு கர்மயோகி என்ற திரைப்படத்திற்காக தென்னிந்திய திரைப்பட விழாவில் துணை நடிகருக்கான விருது உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.  நடிக்க வந்த 25 ஆண்டுகளில் குணச்சித்திர நடிகராக மட்டுமின்றி வில்லனாகவும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.  அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த காதல் கோட்டை திரைப்படத்தில் இடம்பெற்ற "கவலைப்படாதே சகோதரா" என்ற பாடலுக்கு தலைவாசல் விஜய் நடனமாடி இருந்தார். இந்த பாடல் அப்போது சூப்பர் ஹிட் ஆனது.

தலைவாசல் விஜயின் மூத்த மகள் ஜெயவீனா ஒரு நீச்சல் வீராங்கனையாக உள்ள நிலையில், இவர் சமீபத்தில் நேபாள நாட்டில் தலைநகர் காத்மேடுவில் நடந்த தெற்காசியை நீச்சல் போட்டியில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் ஜெயவீனாவுக்கும், தமிழக கிரிக்கெட் வீரர் அபராஜித்துக்கும் ஏற்கனவே நிச்சயம் முடிந்த நிலையில் நேற்று திருமணம் நடைபெற்றது.


கிரிக்கெட் வீரரான அபராஜித் ரஞ்சிக்கோப்பைக்காக தமிழ்நாட்டின் அணிக்காக விளையாடியவர் என்பதும் அதற்கு பின்பு 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று நடந்து முடிந்த இவரின் திருமணத்திற்கு பல்வேறு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க


Rain Alert :தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... எந்தெந்த மாவட்டங்களில்?


Chess World Cup 2023: உலகக் கோப்பை செஸ்...இறுதிப்போட்டிக்கு முன்னேற்றினார் பிரக்ஞானந்தா