தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் வரிசையில் இருக்கும் முக்கியமான நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. ஒரு நடிகராக மட்டுமின்றி திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் வரலாற்று திரைப்படமான 'கங்குவா' என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் 'புறநானூறு' என்ற படத்திலும் நடிக்க உள்ளார். இந்நிலையில் நடிகர் சூர்யா குறித்த அதிர்ச்சியான தகவல் ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி திரையுலகத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



மேனேஜர் திடீர் நீக்கம் :


மிகவும் பிஸியான ஷெட்யூல் போட்டு நடித்து வரும் நடிகர் சூர்யாவின் ஆஸ்தான மேனேஜராக இருந்து வருபவர் தங்கதுரை. நடிகர் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகாவிற்கும் அவர்தான் மேனேஜராக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென அவரை மேனேஜர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார் சூர்யா என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது இதுவரையில் வெளியாகவில்லை.    


குழப்பத்தில் திரையுலகத்தினர் :


குடும்பத்தில் ஒருவராக சூர்யா மற்றும் ஜோதிகாவின் ஆரம்ப காலகட்டம் முதல் அவர்களின் மேனேஜராக இருந்து வந்த தங்கதுரையை நீக்கிவிட்டு தற்போது சூர்யாவின் நண்பரான மனோஜை மேனேஜராக நியமித்துள்ளனர் என கூறப்படுகிறது. இந்த அதிரடி முடிவுக்கு என்ன காரணமாக இருக்கும் என்பது திரையுலகத்தினர் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 



கசியும் வதந்திகள்:


நடிகர் கார்த்தி, அதிதி ஷங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களுக்கும் தங்கதுரை தான் மேனேஜராக இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சூர்யா அவரை திடீரென நீக்கியுள்ளதால் வேறு சில தகவல்களும் தற்போது இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. அதாவது நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய்பீம்' திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக அமைத்ததோடு 5 தேசிய விருதுகளையும் கைப்பற்றியது. 


'ஜெய்பீம்' திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அப்படம் தேசிய விருது பெறுவதற்கு முக்கியமான காரணம் சூர்யாவின் மேனேஜர் தங்கதுரைதான் என கூறப்படுகிறது. அவர் அந்த சமயத்தில் தேசிய தேர்வு குழுவில் ஒருவராக இருந்தவர் என்றும் அவரின் பரிந்துரையின் பேரில்தான் அப்படம் தேசிய விருதை பெற்றது என தகவல்கள் தாறுமாறாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 


உண்மை என்ன?


உண்மையிலேயே நடிகர் சூர்யா அவரின் மேனேஜர் தங்கதுரையை நீக்கிவிட்டாரா? அப்படி என்றால் அதற்கான காரணம் என்ன என்பதை வெளிப்படையாக கூறினால் மட்டுமே இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இல்லையேல் ஒரு விஷயத்துக்கு கை, கால், நாக்கு, மூக்கு என பொருத்தி அதை வேறு விதமாக பேசப்படும். 


சினிமாவை பொறுத்தவரையில் யாருக்கு என்ன நடக்கும் யாருடைய நிலை என்னவாகும் என்பதை எல்லாம் கணிக்கவே முடியாது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சரியான சான்றாகும் என இணையத்தில் செய்திகளை பரப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள். ஞானவேல் ராஜா  - அமீர் பிரச்சனையுடன் சூர்யா குடும்பத்தை சம்பந்தப்படுத்தி பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த சர்ச்சையின் சேர்ந்துகொண்டது.