வணங்கான் இசை வெளியீடு


தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பாதையை உருவாக்கியவர் இயக்குநர் பாலா. பாலா திரையுலகத்திற்குள் அடி எடுத்து வைத்து 25 ஆண்டுகள் கடந்துள்ளன. தற்போது அருண் விஜய் நடிப்பில் பாலா இயக்கியுள்ள படம் வணங்கான். இப்படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் மிஸ்கின் , நடிகர் சிவகுமார் , நடிகர் சூர்யா , சமுத்திரகனி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியில் சூர்யா பாலாவைப் பற்றி பேசியுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 


300 முறை சிக்ரெட் பிடித்தேன்


" எனக்கு முதல் முதலில் சிகரெட் பிடிக்க சொல்லி குடுத்தது பாலா அண்ணன் தான். நந்தா படத்தில் ஒரு காட்சி அந்த காட்சியில் நான் சிக்ரெட் பிடிக்க வேண்டும் . எனக்கு தம் அடிக்க தெரியாது என்று சொன்னேன். ரொம்ப அவமானமாக இருந்தது. அந்த நேரத்தில் 300 முறை சிகரெட் பிடித்து பழகினேன். அன்று கற்றுக்கொண்டது இன்று ரோலக்ஸ் படம் வரை யூஸ் ஆகிருக்கு." என சூர்யா பாலாவைப் பற்றி பேசினார்.


சூர்யா முன் தம் அடிக்க மாட்டேன்


நடிகர் சூர்யா பற்றி பாலா பேசியபோது இப்படி கூறினார் ' நான் தம்பி சூர்யா முன்னாள் தம் அடிக்க மாட்டேன். தெரிந்தால் வருத்தப்படுவார். அதனால் பெரிதாக மானிட்டர் வைத்து அதற்கு பின் இருந்து தம் அடிப்பேன். சீனில் நடித்துக் கொண்டே நான் எத்தனை முறை சிக்ரெட் அடித்தேன் என்பதை சூர்யா சரியாக சொல்வார். சூர்யாவுடன் வேலை செய்தால் நடிகருடன் வேலை செய்தது மாதிரி இருக்காது தம்பியுடன் வேலை செய்தது மாதிரி இருக்கும். என்னுடைய குறைகளை என்னிடம் நேரடியாக வந்து  ' இது உங்க படம் மாதிரி இல்லை ' என்று சொல்லும் உரிமை சூர்யாவுக்கு இருக்கிறது. "