சூர்யா:
சூர்யா நடிப்பில் இப்போது ரெட்ரோ, சூர்யா45 மற்றும் லக்கி பாஸ்கர் படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படம் என்று பிஸியான நடிகராக மாறியுள்ளார். ஏற்கனவே கங்குவா கொடுத்த தோல்விக்கு பிறகு இப்போது ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து நடித்து வருகிறார் சூர்யா.
இந்தப் படங்கள் வரும் 2025 ஆம் ஆண்டு ஒவ்வொன்றாக ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் தான் சூர்யா பற்றி யாருக்கும் தெரியாத ஒரு உண்மையை நடிகரும், பாடகருமான கிரிஷ் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதாவது நடிகர் சூர்யா, சாலை விபத்தில் ஒருவரது உயிரை காப்பாற்றி இருக்கிறார் என்று இதுவரை யாருக்குமே தெரியாத தகவலை கூறியிருக்கிறார்.
சிங்கம் 3 படத்தின் படப்பிடிப்பு:
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சூர்யா நடித்த சிங்கம் 3 படத்தின் படப்பிடிப்பு நெல்லூரில் நடைபெற்று கொண்டிருந்தது. ஷூட்டிங் முடிந்து, குவாரியிலிருந்து நானும் சூர்யாவும் காரில் சென்று கொண்டிருந்தோம். நான் டிரைவர் சீட்டில் அமர்ந்து டிரைவ் பண்ண, சூர்யா முன் சீட்டில் தான் இருந்தார்.
விபத்தில் சிக்கியவருக்கு உதவி:
அப்போது ஒருவர் தலையில் அடிபட்ட நிலையில் கீழே விழுந்து கிடந்தார். அவருக்கு அருகில் ஒரு பெண் அழுது கொண்டிருந்தார். அதனை எல்லோருமே சுற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே வண்டியை நிறுத்த சொன்ன சூர்யா, உடனை அவரை தூக்கி நாங்கள் வந்த ஜாக்குவார் ஒயிட் நிற காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது அந்தப் பகுதியில் பெஸ்ட் ஹாஸ்பிடல் எது என்று பார்த்தால் அது திருப்பதி சிம்ஸ் ஹாஸ்பிடல் தான்.
ரியல் ஹீரோவாக மாறிய சூர்யா:
தனது ஃப்ரண்ட்ஸூக்கு போன் செய்து 4 மருத்துவர்களை மருத்துவமனைக்கு வர வைத்து அடிபட்டவரது உயிரை காப்பாற்றினார். இதுவே நானாக இருந்திருந்தால் அப்படியெல்லாம் யோசித்து எதுவும் செய்திருக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார். இச்சம்பவம் பற்றி சூர்யாவிடம் கேட்ட போது, எப்படி க்ரிஷ் அப்படி எளிதில் விட முடியும். அப்படி நான் விட்டிருந்தால் இன்று என்னுடைய தம்பி கார்த்தி உயிரோடு இருந்திருக்க மாட்டான். கார்த்திக்கிற்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது. கோடம்பாக்கம் பிரிட்ஜிற்கு அருகில் கார்த்தி விபத்தில் சிக்கினார்.
விபத்தில் சிக்கிய கார்த்தி:
அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் தான் இவர், சிவக்குமாரோட மகன் என்று கூறி மருத்துவமனையில் சேர்த்தார். அதன் பிறகு தான் கார்த்தியும் உயிர் பிழைத்தார். இப்படி ஒரு சம்பவத்திற்கு பிறகு சூர்யா விபத்தில் சிக்கியவரை காப்பாற்றியிருக்கிறார். விபத்தில் சிக்கியவரின் மகளுக்கு அடுத்த வாரத்தில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது சூர்யாவின் செயல் என்னை வியக்க வைத்தது. அவர் கொண்டாடப்பட வேண்டியவர் என்று புகழ்ந்து பேசியிருக்கிறார்.