Mahindra BE 6e: இண்டிகோ நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளை, சட்டப்படி நீதிமன்றத்தில் தொடர்ந்து எதிர்கொள்வோம் என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.


மஹிந்திரா பிராண்ட் விவகாரம்:


இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், மஹிந்திரா நிறுவனம் எஸ்யுவி கார் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எதிர்கால சந்தை தேவையை கருத்தில் கொண்டு, மின்சார வாகன உற்பத்தியையும் விரிவுபடுத்தி வருகிறது. அந்த வகையில் அண்மையில் தான் BE 6e மற்றும் XEV 9e  எனப்படும் இரண்டு மின்சார எஸ்யுவிக்களை அறிமுகப்படுத்தியது. ஆனால், அவற்றின் பெயரில் பயன்படுத்தப்படும் 6e என்ற குறியீடு தங்களது பிராண்டுக்குச் சொந்தமானது என இண்டிகோ நிறுவனம் குற்றம்சாட்டி வருகிறது. இதுதொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.



மஹிந்திரா நிறுவனம் விளக்கம்


மஹிந்திரா தனது சமீபத்திய SUVகளான BE 6e மற்றும் XEV 9e தொடர்பான, IndiGo உடனான சட்ட மோதல் தொடர்பாக விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன் எலக்ட்ரிக்-ஆரிஜின் SUV போர்ட்ஃபோலியோவின் ஒரு பகுதியாக 'BE 6e' க்கு சட்டவிதி 12வது பிரிவின் (வாகனங்கள்) கீழ் டிரேட்மார்க் பதிவுக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.


'BE' டிரேட்மார்க் ஏற்கனவே 12வது விதியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாலும், நாங்கள் பயன்படுத்தியுள்ள 'BE 6e-ஐ அடிப்படையாகக் கொண்ட எங்களின் போர்ன் எலெக்ட்ரிக் பிளாட்ஃபர்மை  குறிக்கிறது என்றும் மஹிந்திரா விளக்கமளித்துள்ளது. இருப்பினும், இண்டிகோவின் ஆபரேட்டரான இன்டர்குளோப் ஏவியேஷன் லிமிடெட், அதன் விமானங்களுக்கான பிராண்ட் அடையாளமாக பயன்படுத்தும் 6E குறியீட்டை மஹிந்திரா பயன்படுத்துவதற்கு எதிராக வாதிட்டது.


இந்நிலையில், " இண்டிகோ விமான நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் "6E"ன் அடிப்படையில் இருந்தே எங்கள் குறியோடு வேறுபட்டுள்ளது. இது குழப்பத்தின் அபாயத்தை நீக்குகிறது. தனித்துவமான ஸ்டைலிங் அதன் தனித்துவத்தை மேலும் வலியுறுத்துகிறது. எங்கள் பதிவு விண்ணப்பம் முற்றிலும் வேறுபட்ட தொழில் துறை மற்றும் தயாரிப்புக்கானது, எனவே எந்த மோதலையும் காணவில்லை” என மஹிந்திரா விளக்கமளித்துள்ளது.


பெயரை மாற்றிய மஹிந்திரா


 


மேலும், 'BE 6e' பிராண்டை மட்டுமே நாங்கள் பயன்படுத்துகிறோம், அது IndiGo விமானங்கள் பயன்படுத்தும் '6E' அல்ல. அதே நேரத்தில், மற்றொரு இந்திய பன்னாட்டு நிறுவனத்துடன் கவனத்தை சிதறடிக்கும் மற்றும் தேவையற்ற மோதலில் இருப்பதை ரசிக்கவில்லை. எனவே, எங்களது காரை மறுபெயரிட முடிவு செய்துள்ளோம் என மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, “இரண்டு பெரிய, இந்திய பன்னாட்டு நிறுவனங்கள், உண்மையில் நாம் ஒருவரையொருவர் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தில் வெற்றிபெறச் செய்யும் போது, ​​கவனத்தை சிதறடிக்கும் மற்றும் தேவையற்ற மோதலில் ஈடுபடுவதை நாங்கள் விரும்பத்தகாததாகக் காண்கிறோம். எனவே எங்கள் தயாரிப்பை “BE 6” என்று பிராண்ட் செய்யமுடிவு செய்கிறோம்,” என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது.


அதே சமயம், இந்தப் பிரச்சினையை நீதிமன்றத்தில் தொடர்ந்து எதிர்த்துப் போராடுவதாகவும், BE 6e என்ற பிராண்ட் பெயரின் மீதான எங்களின் உரிமையை மீட்டெடுப்போம் என்றும் மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.


 


Car loan Information:

Calculate Car Loan EMI