மாரடைப்பால் உயிரிழந்த நடன கலைஞர்
அகரம் அறக்கட்டளையின் மூலமாக ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்விவுக்கு உதவி வருகிறார் சூர்யா. கடந்த பத்து ஆண்டுகளாக ஸ்டண்ட் கலைஞர்களுக்கு வருடம் 10 லட்சம் காப்பீடு தொகை கட்டி வரும் தகவல் சமீபத்தில் பேசுபொருளானது. இப்படியான நிலையில் நடன கலைஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழ்ந்ததைத் தொடர்ந்து அவரது கல்லூரி படிப்பிற்கு சூர்யாவின் அகரம் அறக்கட்டளை சார்பாக ஒரு லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை பிரபல நடன கலைஞர் ஷோபி தனது எஸ்க் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
சூர்யா உதவி
"எங்களது சங்கத்தின் பெண் நடன கலைஞர் ஒருவர் சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்த நிலையில் அவரது மகனின் கல்லூரி படிப்பிற்காக ரூபாய் ஒரு லட்சம், மதிப்பிற்குரிய அன்பிற்கினிய சகோதரர் சூர்யா சார் அவர்களின் அகரம் அறக்கட்டளை உதவியது" என ஷோபி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
கருப்பு
சூர்யா தற்போது ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்துள்ளார்கள். ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் த்ரிஷா, இந்திரன், நட்டி, ஸ்வாசிகா, ஷிவதா மற்றும் பலர் நடித்துள்ளார்கள். சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். கருப்பு படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. கருப்பு படத்தைத் தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் தற்போது சூர்யா நடித்து வருகிறார். மலையாள நடிகை மமிதா பைஜூ இப்படத்தில் ஜோடியாக நடிக்கிறார்.