Suriya : பாலா இல்லனா சூர்யா இல்ல...வணங்கான் இசைவெளியீட்டில் எமோஷனலான சூர்யா
"சேது படம் பார்த்து இப்படி ஒரு இயக்குநரால் இயக்க முடியுமா என்று 100 நாட்கள் அந்த படத்தின் தாக்கத்தில் இருந்தேன்" - வணங்கான் இசைவெளியீட்டில் சூர்யா

வணங்கான் இசை வெளியீடு
இயக்குநர் பாலா இயக்கி அருண் விஜய் நடித்துள்ள வணங்கான் திரைப்படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையின் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பாலாவை பற்றி உருக்கமாக பல வார்த்தைகளை பகிர்ந்துகொண்டார்.
பாலா இல்லையென்றால் சூர்யா இல்லை
" சேது படம் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்படி ஒரு நடிகரால் நடிக்க முடியுமா இப்படி ஒரு இயக்குநரால் இயக்க முடியுமா என்று 100 நாள்அந்த படத்தின் தாக்கத்தில் இருந்தேன். 2000 ஆம் ஆண்டு நெய்க்கார்பட்டியில் நான் படப்பிடிப்பில் இருந்தபோது பாலா அண்ணனிடம் இருந்து ஒரு ஃபோன் வந்தது. அடுத்த படத்தை உன்னை வைத்து தான் இயக்கப்போகிறேன் என்று அவர் சொன்னார். அவர் சொன்ன அந்த வார்த்தை என் வாழ்க்கையை மாற்றியது. பிதாமகன் படத்தில் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் அவரிடம் நிறைய கற்றிருக்கிறேன். பாலா அண்ணனிடம் இருந்து ஒரு ஃபோன் வரவில்லை என்றால் இன்று இந்த வாழ்க்கை எனக்கு இல்லை. நந்தா படம் பார்த்துவிட்டு தான் காக்க காக்க படத்திற்கு கெளதம் மேனன் அழைத்தார் . அதன்பிறகு தான் முருகதாஸ் கஜினி படத்திற்கு கூப்பிட்டார். இதற்கெல்லாம் பாலா அண்ணன் தான் காரணம். அண்ணன் என்பது வெறும் வார்த்தை இல்லை . அது ஒரு உறவு. எனக்கு இந்த வாழ்க்கை கொடுத்ததற்கு எனது பேரன்பும் மரியாதையும். வணங்கான் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படமாக இருக்கும் . அடுத்த தலைமுறை இந்த படத்தைப் பார்த்து நிறைய கற்றுக் கொள்ளும் என்று நம்புகிறேன். ஆல் தி பெஸ்ட் அருண் விஜய்' என சூர்யா நிகழ்ச்சியில் பேசினார்.
Just In