சூர்யா


நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய தோல்வியை தழுவியுள்ளது. கங்குவா படத்தின் தோல்வியைத் தொடர்ந்து சூர்யா நடிக்கவிருந்த அடுத்தடுத்து இரண்டு படங்களும் அவர் கைவிட்டு போயுள்ளன. சுதா கொங்காரா இயக்கவிருந்த புறநாநூறு படத்தில் சூர்யா நாயகனாக நடிக்க இருந்தார். இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எல்லாம் வெளியானப்பின் இப்படத்தில் இருந்து சூர்யா விலகினார். இப்படத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் சூர்யா புறநாநூறு படத்தில் இருந்து விலகியது குறித்தான காரணம் இதுவரை வெளிவராமல் இருந்தது. இந்த காரணத்தை தற்போது வலைபேச்சு பிஸ்மி தனது சேனலில் தெரிவித்துள்ளார்.


இந்தி பட வாய்ப்புக்காக சூர்யா எடுத்த முடிவு


இந்தி எதிர்ப்பு போராட்டை மையமாக வைத்து புறநாநூறு திரைப்படம் உருவாக இருந்தது. இன்னொரு பக்கம் சூர்யா இந்தியில் கர்ணா என்கிற மாபெரும் வரலாற்று திரைப்படத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வந்தது. புறநாநூறு படத்தில் நடித்தால் சூர்யாவுக்கு இந்தி படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போகும் அதனால் புறநாநூறு படத்தில் இருந்து விலகும்படி சூர்யாவின் சகோதரர் கார்த்தியும் சூர்யாவின் மனைவி ஜோதிகாவும் அவருக்கு அறிவுறுத்தியதாக வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார். 


புறநாநூறு படத்தில் இருந்து சூர்யா விலகியதைத் தொடர்ந்து அப்படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க இருக்கிறார். கங்குவா படத்தின் தோல்வியால் சூர்யா இந்தியில் நடிக்கவிருந்த கர்ணா படமும் கைவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சூரரைப் போற்று மாதிரியான ஒரு மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த சுதா கொங்காராவின் கதையில் நடிக்கும் வாய்ப்பை சூர்யா தவறவிட்டதும் இல்லாமல் தற்போது கர்ணா படமும் அவர் கையை விட்டு நழுவியுள்ளது. இதைதான் நம் தாத்தா பாட்டிமார்கள் அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை என்று சொல்வார்கள்.






சூர்யா 45


தற்போது சூர்யா கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்தபடியாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் பூஜை நேற்று கோயம்புத்தூரில் நடைபெற்றது. ட்ரீம் வாரியர்ஸ் இப்படத்தை தயாரிக்கும் நிலையில் ஏ.ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.