சூர்யா 44


ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படம் சூர்யா 44 . சூர்யா நாயகனாக நடிக்கும் நிலையில் நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் , ஜெயராமன் , மற்றும் கருணாகரன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையும், ஷ்ரெயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவும் செய்கிறார்கள். சஃபிக் முகமத் அலி படத்தொகுப்பும், ஜாக்கி கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார். முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி மற்றும் ஷாருக் கான் இயக்கிய ஜவான் படங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றிய மாஸ்டர் கீசா காம்பக்டீ இந்தப் படத்தில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றுகிறார். 


அந்தமானில் படப்பிடிப்பு


இப்படி எல்லா திசைகளில் இருந்து கலைஞர்களை திரட்டிய கார்த்திக் சுப்பராஜ் கடந்த ஜூன் 2 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார். அந்தமானின் மிகப்பெரிய அளவில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கிய கையுடன் படத்தின் முதல் ஷாட்டையும் வெளியீட்டு கவனம் ஈர்த்தார். மொத்தம் 30 நாட்கள் அந்தமானில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இதில் சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல் ஒன்றும் படமாக்கப் பட்டு வருகிறது.  இதனைத் தொடர்ந்து சென்னையில் படப்பிடிப்பு தொடர இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது. 


ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்






இப்படியான நிலையில் சூர்யா 44 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி இப்படத்தின் டைட்டில் ஜூன் மாதம் இறுதிக்குள்ளாகவும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜூலை 23 ஆம் தேதி சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே நாளில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றும் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 




மேலும் படிக்க : June 10 : கமல்ஹாசன் நடித்துள்ள கல்கி படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு...கமல் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்