Dhanush: நம் காலத்தின் சிறந்த நடிகர் தனுஷ்.. 3, மயக்கம் என்ன படங்களில் நண்பராக நடித்த சுந்தர் நெகிழ்ச்சி!

3 மற்றும் மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களில் தனுஷின் நண்பனாக நடித்திருந்தார் சுந்தர். இரண்டு படங்களிலும் இவரது கதாபாத்திரம் பரவலான கவனத்தைப் பெற்றது.

Continues below advertisement

3

தனுஷ் நடித்து கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘3’. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்தப் படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாக, அனிருத் இந்தப் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன், பிரபு, பானுப்பிரியா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

Continues below advertisement

இளைஞர்களைக் கவர்ந்த 3

3 திரைப்படம் சுமாரான வெற்றியைப் பதிவு செய்தது என்றாலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அனிருத் இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் படம் வெளியாவதற்கு முன்பாக மிகப்பெரிய ஹிட் ஆகின. அதிலும் குறிப்பாக ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் கண்டம் கடந்து ஹிட் அடித்து யூடியூபில் சாதனைப் படைத்தது.

ரீ ரிலீஸ்

கடந்த நவம்பர் மாதத்தின் 3வது வாரம் 3 படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. அதுவும் சென்னையில் முக்கிய தியேட்டர்களில் ஒன்றாகத் திகழும் வடபழனி கமலா தியேட்டரில் திரையிடப்பட்டது. தீபாவளி படங்கள் சரியாக போகாத காரணத்தால் இப்படம் திரையிடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் தியேட்டர் நிர்வாகம் எதிர்பார்க்காத அளவுக்கு மிகப்பெரிய வரவேற்பு இப்படத்துக்கு மீண்டும் கிடைத்துள்ளது. நாள் ஒன்றுக்கு குறைந்தது 6 காட்சிகள் ‘3’ படம் திரையிடப்படும் நிலையில் கடந்த 2 வாரங்களாக எல்லா காட்சிகளும் ஹவுஸ்ஃபுல் ஆகியுள்ளது. மேலும் இந்த வாரத்துக்கான காட்சிகளின் பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன. இப்படியாக ரிலீஸ் ஆன சமயத்தில் பெறாத வெற்றியை 3 படம் ரீ-ரிலீஸில் பெற்றுள்ளது. 

இதுவரை வெளியான காட்சிகளின் அடிப்படையில் 3 படத்துக்கு 33 ஆயிரத்து 333 டிக்கெட்டுகள் விற்று தீர்ந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

தனுஷை பாராட்டிய நடிகர் சுந்தர்

3 படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்துள்ள வரவேற்பைப் பார்த்து நடிகர் தனுஷ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் சுந்தர் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். 3 மற்றும் மயக்கம் என்ன உள்ளிட்ட படங்களில் தனுஷின் நண்பனாக நடித்திருந்தார் சுந்தர்.

இரண்டு படங்களிலும் இவரது கதாபாத்திரம் பரவலான கவனத்தைப் பெற்றது. தன்னுடைய பதிவில் ”3 மற்றும்  மயக்கம் என்ன படங்கள் என் வாழ்க்கையை மாற்றிய படங்கள்.  இரண்டு படங்களிலும் நுணுக்கங்கள் இருந்தன, அவை இன்னும் அதிகமாக ஆராயப்பட்டிருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.  நம் காலத்தின் சிறந்த நடிகர்களில் ஒருவரான  தனுஷிடன் நான் கற்றுக்கொள்ள நிறைய இருந்தன.

இரண்டு படங்களுமே அவற்றின் குறைபாடுகளைக் கொண்டிருந்தன என்றாலும் இந்தப் படங்கள் எனக்கு திறந்துவிட்ட வாய்ப்புகள், அனுபவம் ஆகியவற்றுக்கு  நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இரண்டு படங்களின் இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினர் எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருப்பார்கள். 3 படம்  மீண்டும் திரையரங்குகளுக்கு வருவதில் மகிழ்ச்சி” என்று அவர் கூறியுள்ளார்.

இந்தப் பதிவு தனுஷ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement