நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய படமாக கொட்டுக்காளி இருக்கும் என நடிகர் சூரி தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து நடிகர் சூரி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “என்னுடைய முந்தைய படங்களான விடுதலை, கருடனிலிருந்து முற்றிலும் வேறுப்பட்ட திரைப்படமாக #கொட்டுக்காளி இருக்கும். இது ஒரு Mainstream Content Oriented திரைப்படம். உண்மைக்கு மிக நெருக்கமான படம். இதில் வரும் என்னுடைய #பாண்டி என்கிற கதாபாத்திரம் எல்லா குடும்பங்ளிலும் இருக்கும் ஒருவன் தான். இந்த சமூகம் சொல்லிக்கொடுத்த உறவு முறைகளையும், நம்பிக்கைகளையும் பெரிதும் நம்புகிற ஒரு கதாபாத்திரம் தான் பாண்டி. இந்த படத்தில் வரும் பயணத்தில், இந்த சமூகம் உருவாக்குன பாண்டிக்கும், பாண்டி என்கிற தனிப்பட்ட ஒருவனுக்கும் நடக்குற மன போராட்டத்த சரியா பிரதிபலிக்கனும்னு ரொம்ப கவனமா இருந்தேன்.  அதை சரியாவும் பண்ணி இருக்கேன்னு நம்புறேன். நீங்க அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படமாக கொட்டுக்காளி நிச்சயம் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். 


கடந்த 2009ஆம் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா சாப்பிட்டே பட்டிதொட்டியெங்கும் ஃபேமஸ் ஆனவர் நடிகர் சூரி. மதுரையில் பிறந்த இவர் மதுரை பாஷையிலேயே அனைவரது மனதையும் கொள்ளை கொண்டார். 


காமெடியில் இவர் அடித்த லூட்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்தது. நான் மகான் அல்ல, களவாணி, குள்ளநரி கூட்டம், வாகை சூட வா, மனம் கொத்தி பறவை, சுந்தர பாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, வேதாளம், ரஜினி முருகன், அரண்மனை 2, என ஏராளமான காமெடி கதாப்பாத்திரங்களில் கலக்கி இருந்தார். 




சினிமாத்துறைக்கு வந்து பல வருடங்களுக்கு பின், வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அவரின் நடிப்பு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்ததது. இதையடுத்து அவர் ஹீரோவாக நடித்து வெளியான படம் கருடன். இதில் சசிக்குமார் படத்தில் இருந்தாலும் சூரியே முழு நேர ஹீரோவாக வலம் வந்தார். இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து ஹீரோவாக எண்ட்ரி கொடுத்துவரும் சூரிக்கு அடுத்த படம் வெளியாக தயாராகி விட்டது. இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி நடிக்கும் படம் கொட்டுக்காளி. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையில் வெளியாக இருக்கிறது.