ஒரு காமெடி நடிகராக தனது பயணத்தைத் தொடங்கிய சூரி கொஞ்சம் கொஞ்சமாக மாஸ் நடிகராக மாறி வருவதை ரசிகர்கள் வரவேற்று வருகிறார்கள்.
கருடன்
விடுதலைப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் சூரி அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி நடிக்கும் கருடன் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப் பட்டது. வெற்றிமாறன் இப்படத்துக்கு கதை எழுதும் நிலையில், இப்படத்துக்கு இது கூடுதல் சிறப்பம்சமாக அமைந்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசை அமைக்கிறார்.
இப்படத்தில் சசிகுமார் சூரியுடன் இணைந்து நடித்துள்ளார். சொக்கன் எனும் கதாபாத்திரத்தில் விசுவாசமான நாயகனாக இந்த வீடியோவில் சூரி தோன்றும் நிலையில், “விசுவாசத்துல மனுஷனுக்கும் நாய்க்கும் போட்டி வந்தா எப்பவும் நாய் தான் ஜெயிக்கும், ஆனால் அதே நாய்க்கும் சொக்கனுக்கும் போட்டி வந்தா, சொக்கன் தான் ஜெயிப்பான்” என சூரியின் கதாபாத்திரத்தைப் பற்றி சசிகுமார் கதாபாத்திரம் விவரிக்கும் வகையிலான காட்சிகள் இடம்பெற்று கவனமீர்த்துள்ளன.
கொட்டுக்காளி