இனிமே ஃபுல்லா ஹீரோ தான் போல என நடிகர் சூரி குறித்து சிவகார்த்திகேயன் ட்வீட் செய்துள்ளார்


நடிகர் சூரி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா ரசிகர்கள், சினிமாத்துறையினர் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சூரியின் பிறந்தநாளை அடுத்து சமீபத்தில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களைம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் போட்டோஷூட் எடுக்கப்பட்ட போது உருவான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் சூரி.






அந்த வீடியோவை ரீட்வீட் செய்து பதிவிட்டுள்ள நடிகர் சிவகார்த்திகேயன்,  எதிர் நீச்சல் அடி வென்று ஏற்று கொடி. ஆள் செம்மயா இருக்கீங்க. இனிமே ஃபுல்லா ஹீரோ தான் போல. நாங்க சங்கத்துகு வேற செயலாளர தான் பாக்கணும் போல. என் இனிய அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.






சிவகார்த்திகேயன் தன்னுடன் உடன் பிறவா சகோதரன் என அடிக்கடி கூறும் சூரி, அவருடன் பல படங்களில் நடித்துள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, தேசிங்குராஜா, கேடிபில்லா கில்லாடி ரங்கா,வெள்ளக்காரத்துரை போன்ற படங்கள் சூரி அதிகம் ஜொலித்த திரைப்படங்கள் ஆகும்.