Actor Sivakarthikeyan | ‛எனக்கொரு ஒன்சைடு லவ் இருந்துச்சு…’ - சிவகார்த்திகேயன் சொன்ன காதல் ரகசியம்!

Actor Sivakarthikeyan : நானும் கவிஞர் விவேக்கும் ஒரே கிளாஸ்ல படிச்சிருக்கோம், அது எங்களுக்கே தெரியாது. ஒரே க்ளாஸ் ஒரே க்ரூப், நான் இந்த பக்கம் உக்காந்திருக்கேன், அவரு அந்தப் பக்கம் உக்காந்திருந்திருக்கார்.

Continues below advertisement

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகதான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். தற்போது இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார். சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் மிக பெரிய அளவில் வெற்றி அடைந்தது. சில வருடங்கள் முன்பு நடந்த ஒரு பிரபல பத்திரிக்கை நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் சுவாரஸ்யமான பல கேள்விகளும் பதில்களும் இடம்பெற்றன.

Continues below advertisement

அந்த நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயனிடம் அவரைப்பற்றிய ஒரு ரகசியத்தை கேட்டபோது யாருக்குமே தெரியாத ஸ்டேஜ் போட்டு சொல்ல சொல்றீங்க… என்று கலாய்த்துவிட்டு வழக்கம்போல அவர் பாணியில் சிரிப்பாக பதில் சொன்னார், "ஒருதலை காதல் ஒன்னு இருந்துச்சு, அதுவும் கொஞ்ச நாள் தான் இருந்துச்சு, அதுக்குள்ள அவங்க வேற ஒரு பையன் கூட கமிட் ஆகிட்டாங்க. அதுதான் வாழ்க்கைல இருந்த ஒரே காதல். நான் பெருசா வெளில தெரியுற மாதிரிலாம் தப்பு செய்ய மாட்டேன், ரசிக்குற மாதிரி தான் செய்வேன். பிரச்சனைன்னு யாரும் வீட்டுபக்கம் வந்துடக்கூடாதுன்னு அதுல உறுதியா இருப்பேன். ஸ்கூல் டைம்ல ரொம்ப மோசம், நான் ஸ்டேஜ் கூட ஏறினது கிடையாது. நானும் லிரிசிஸ்ட விவேக்கும் ஒரே கிளாஸ்ல படிச்சிருக்கோம், அது எங்களுக்கே தெரியாது. ஒரே க்ளாஸ் ஒரே க்ரூப், நான் இந்த பக்கம் உக்காந்திருக்கேன், அவரு அந்தபக்கம் உக்காந்திருந்திருக்கார், எங்க ரெண்டு பேருக்குமே தெரியாது. காலேஜ்ல கொஞ்சம் தெரியும், ஸ்டேஜ் ஆக்டிவிடீஸ் எல்லாம் இருந்ததனால. ரகசியம்ன்னா அது ஒன்னு மட்டும்தான்." என்றார்.

அந்த ஒன் சைட் காதலியை சினிமாவிற்கு வந்த பிறகு பார்த்தீர்களா என்று கேட்கையில், "தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தபோது, சிட்டி சென்டர்ல பாத்தேன், ஆனா பேசல, பின்னாடி ராஜா சார் மியூசிக் ஒடுச்சு. தூரத்தில் இருந்து பார்த்தேன்" என்றார். அப்போது, 'கூட அந்த பையன் இல்லை' என்று கூறியதும் கூடியிருந்த அரங்கம் முழுவதும் சிரிப்பலை சூழ்நதது. "அப்பாடா… அவனுக்கும் கிடைக்கல" என்று கூறி அரங்கத்தினரை சிரிக்கவைத்தார்.

"அதன்பிறகு கல்யாணம் ஆச்சா, அகலையா, அந்த விஷயங்கள் எல்லாம் நான் கேட்டுகல, நான் தேடவும் இல்ல." என்று கூறி முடித்தார். தற்போது டான் திரைப்படத்தில் நடித்துவரும் சிவகார்த்திகேயன், அதன்பிறகு ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் ராஜ்குமார் பெரியசாமி திரைப்படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் ஜதிரத்னலு திரைப்படத்தின் இயக்குனர் அனுதீப் கேவி இயக்கும் திரைப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அவருக்கு அயலான் திரைப்படம் வெளியீட்டிற்காக காத்திருக்கிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola